கோவை மாநகர பெண் காவலர்களுக்கான கைப்பந்து மற்றும் கபடி போட்டி - மாநகர காவல் ஆணையர் துவங்கி வைத்தார்!

தமிழ்நாடு காவல்துறையில் பெண்கள் காவலர்களாக பணியில் சேர்ந்து, 50 ஆண்டுகள் நிறைவடைவதையொட்டி கோவை மாநகர காவல்துறை சார்பில் பெண் காவலர்களுக்கான கைப்பந்து மற்றும் கபடி போட்டிகளை மாநகர காவல் ஆணையாளர் பாலகிருஷ்ணன் கலந்து கொண்டு துவக்கி வைத்தார்.


கோவை: கோவை மாநகர காவல்துறை சார்பில் பெண் காவலர்களுக்கான கைப்பந்து மற்றும் கபடி போட்டிகள் நடைபெற்றது.

காவல்துறையில் பெண்கள் காவலர்களாக சேர்ந்து 50 ஆண்டுகள் நிறைவானதை ஒட்டி கோவை மாநகரில் பெண் காவலர்களுக்கு பல்வேறு போட்டிகள் மற்றும் நிகழ்ச்சிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.



இந்நிலையில், கோவை மாநகர காவல் ஆணையாளர் பாலகிருஷ்ணன் அறிவுறுத்தலின் படி பல்வேறு நிகழ்ச்சிகள் மற்றும் போட்டிகள் நடத்தப்பட்டு வருகிறது. அதன் தொடர்ச்சியாக இன்று மாநகர பெண் காவலர்களுக்கான கைப்பந்து மற்றும் கபடி போட்டிகள் நடைபெற்றது.



இதில் ஆய்வாளர் தெய்வமணி தலைமையில் Thunder Girls என்ற அணியும், ஆய்வாளர் தெளலத் நிஷா தலைமையில் Fire என்ற அணியும் மோதின. இதனை மாநகர காவல் ஆணையாளர் பாலகிருஷ்ணன் கலந்து கொண்டு துவக்கி வைத்தார். இந்த போட்டிகள் ஆயுதப்படை உதவி ஆணையாளர் சேகர் மேற்பார்வையில் நடைபெற்றது.



இதில் மாநகர காவல் தலைமை அலுவலக ஆணையாளர் சுகாசினி உட்பட பல்வேறு காவலர்கள் பங்கேற்று விளையாட்டை கண்டுகளித்தனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...