தொடர் விடுமுறை எதிரொலி - உதகையில் குவிந்த சுற்றுலா பயணிகள்!

தொடர் விடுமுறை காரணமாக உதகையில் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் குவிந்ததால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. காவல்துறை முறையாக போக்குவரத்தை கையாளாததால் பல மணி நேரமாக சுற்றுலா பயணிகள் அவதியடைந்தனர்.


நீலகிரி: உதகைக்கு அதிகளவில் சுற்றுலா பயணிகள் வருகை தந்ததால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

ரம்ஜான் மற்றும் வார விடுமுறை நாள் என்பதால் உதகைக்கு ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வந்துள்ளனர். கர்நாடகா கேரளாவிலிருந்து சொந்த வாகனங்களில் உதகையை நோக்கி சுற்றுலா பயணிகள் தொடர்ந்து வருவதால் காலை முதலே நகரில் பல பகுதிகளில் கடும் வாகன நெரிசல் ஏற்பட்டது.



இதனால் சுற்றுலா தலங்களுக்கு செல்லக்கூடிய சுற்றுலா பயணிகள் மணி கணக்கில் சாலைகளில் காத்து கிடக்கும் நிலை ஏற்பட்டது. உதகை காவல் துறையினர் முறையான திட்டமிடாததே போக்குவரத்து நெரிசலுக்கு காரணம் என உள்ளூர் மக்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.

இதுதொடர்பாக உள்ளூர் மக்கள் கூறியதாவது, பேருந்து நிலையத்திலிருந்து பத்து நிமிடங்களில் வர வேண்டிய இடத்திற்கு ஒன்றரை மணி நேரமாக பயணம் செய்து வந்தோம். நகரில் முக்கிய சந்திப்புகளில் மட்டுமே போலீசார் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

மற்ற இடங்களில் போலீசார் இல்லாதது தான் போக்குவரத்து நெரிசலுக்கான காரணம். குறிப்பாக மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு உள்ள சாலைகளில் மூன்று மணி நேரத்திற்கு மேலாக வாகனங்கள் அணிவகுத்து நின்றன. இதனால் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் போக்குவரத்தை சீர் செய்யும் பணியில் ஈடுபட்டார்.

நகரில் பல பகுதிகளில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதால், உள்ளூர் மக்கள் மட்டுமின்றி சுற்றுலாப் பயணிகளும் கடும் சிரமத்திற்கு ஆளாகினர். இதில் சில சுற்றுலா பயணிகள் வாகனங்களை நிறுத்தி விட்டு சுற்றுலா தலங்களுக்கு நடந்தே செல்லும் நிலைக்கும் தள்ளப்பட்டனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...