பென்சில் முனையில் முகக்கவசம் - விழிப்புணர்வு ஏற்படுத்திய கோவை ஆட்டோ ஓட்டுனர்!

மீண்டும் கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில், கோவை காந்திபார்க் பகுதியை சேர்ந்த சுந்தர்ராஜ் என்ற ஆட்டோ ஓட்டுனர், பென்சில் முனையில் முகக்கவசம் மற்றும் Wear Mask என்ற வாசகத்தை செதுக்கி வித்தியாசமான முறையில் விழிப்புணர்வு ஏற்படுத்தி உள்ளார்.


கோவை: கோவை காந்திபார்க் பகுதியில் பென்சில் முனையில் முகக்கவசம் போன்ற சிற்பம் செதுக்கி விழிப்புணர்வு ஏற்படுத்திய ஆட்டோ ஓட்டுனருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.



கோவை காந்திபார்க் பகுதியை சேர்ந்தவர் சுந்தரராஜ். ஆட்டோ ஓட்டுனரான இவர், கோவையில் கொரோனா தொற்று மீண்டும் அதிகரித்து வரும் நிலையில் பொது மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வண்ணம், பென்சில் முனையில், முகக்கவசம் வடிவத்தையும் அதன் கீழ் WEAR MASK என்ற வார்த்தைகளையும் செதுக்கியுள்ளார்.



முகக்கவசம் அணிவது கட்டாயம் என அவரது ஆட்டோவில் ஏறும் அனைத்து பயணிகளுக்கும் வலியுறுத்தியும் வருகிறார். மேலும் முகக்கவசம் இல்லாமல் அவரது ஆட்டோவில் பயணிக்கும் பயணிகளுக்கு முகக்கவசங்களையும் வழங்கி வருகிறார்.



இவர் இதேபோன்று பென்சில் முனையில் விலங்குகள், மனிதர்கள், பெயர்கள் உள்ளிட்ட பல்வேறு வடிவங்களை செதுக்கியுள்ளார். மேலும் அவரது ஆட்டோவில் வைக்கப்பட்டுள்ள I LOVE AUTO என்ற மினி கிராஃப்ட் அனைவரையும் வெகுவாக கவர்ந்துள்ளது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...