10.5 சதவீத இட ஒதுக்கீடு கோரி முதலமைச்சருக்கு கடிதம் அனுப்பிய உடுமலை பாமகவினர்!

திருப்பூர் மேற்கு மாவட்ட பாமக மற்றும் வன்னியர் சங்கம் மற்றும் பாமகவினர் வன்னியர்களுக்கு 10.5 சதவீத இட ஒதுக்கீடு நிறைவேற்ற கோரி உடுமலை தலைமை தபால் நிலையத்தில் இருந்து தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், நீதியரசர்களுக்கு திருப்பூர் மேற்கு மாவட்ட செயலாளர் இரா.பழனிச்சாமி தலைமையில் கடிதங்கள் அனுப்பப்பட்டது.



திருப்பூர்: உடுமலை அருகே 10.5 சதவீத இடஒதுக்கீடு வழங்க கோரி பாமக சார்பில் முதல்வர் மற்றும் நீதியரசர்களுக்கு கடிதம் அனுப்பபட்டுள்ளது.

திருப்பூர் மேற்கு மாவட்டத்திற்கு உட்பட்ட உடுமலை மற்றும் மடத்துக்குளம் சட்டமன்ற தொகுதியில் உள்ள அனைத்து தபால் நிலையங்களில் சுமார் 50 ஆயிரத்துக்கு அதிகமானோர் முதலமைச்சர் மு க ஸ்டாலின் மற்றும் நீதி அரசர்களுக்கு தபால் அனுப்பப்படும் என தெரிவிக்கப்பட்டது.



இந்நிலையில் உடுமலை தலைமை தபால் நிலையத்தில் நடைபெற்ற கடிதம் அனுப்பும் நிகழ்வில் திருப்பூர் மேற்கு மாவட்ட மாவட்ட தலைவர் கு.சிங்காரவேலு, மாவட்ட உழவர் பேரியக்க செயலாளர் அ.பழனிச்சாமி, மாநில செயற்குழு உறுப்பினர் முருகானந்தம், வன்னியர் சங்க மாவட்ட செயலாளர் மின்னல் செந்தில், மாவட்ட மகளிர் அணி செயலாளர் முத்தமிழ் செல்வி, மாவட்ட துணை தலைவர் பழனிச்சாமி, உடுமலை கிழக்கு ஒன்றிய செயலாளர் ப.சிவபாலு தளிபேரூராட்சி செயலாளர் ராமர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவையில் டெங்கு தடுப்பு: பள்ளி, கல்லூரிகளுக்கு சரிபார்ப்பு பட்டியல் வழங்கப்படும்

கோவை மாநகராட்சி 100 வார்டுகளில் டெங்கு தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளது. 28.08.2026 முதல் பள்ளிகள், கல்லூரிகள்...

கோவை மாநகராட்சி மத்திய மண்டலத்தில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரம்

கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டல பகுதிகளில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. வார்டு...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு ஒழிப்பு உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதி வார்டு 27 கவுன்சிலர் அம்பிகா தனபால் பீளமேடு பகுதிகளில் டெங்கு கொசு ஒழிப்பு, சாலை அமைப்பு,...

திருப்பூரில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 27ஆம் தேதி 59.22 அடியாக உயர்ந்துள்ளது. நீர் பிடிப்பு பகுதிகளில...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

ஆனைமலை, பொள்ளாச்சி, வால்பாறை பகுதிகளில் உள்ள அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்துள்ளது. ஆழியாறு அணையி...

கோவையில் போட்டித் தேர்வு பயிற்சி வகுப்புகளுக்கு ஆசிரியர்கள் தேவை

கோவை மாவட்ட வேலைவாய்ப்பு மையத்தில் TNPSC, SSC, RRB, IBPS போன்ற போட்டித் தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட...