கோவை தேவராயபுரம் வனப்பகுதியில் கிடந்த 5 வயது குட்டி யானையின் எலும்புக்கூடுகள் - வனத்துறை விசாரணை!

கோவை தேவராயபுரம் வனப்பகுதியில் வனத்துறை ரோந்து பணியின் போது யானையின் எலும்புக்கூடுகள் கண்டறியப்பட்ட நிலையில், கால்நடை மருத்துவர் குழுவுடன், வனத்துறை அதிகாரிகள் நடத்திய ஆய்வில், இறந்தது சுமார் 5 வயதுடைய குட்டி ஆண் யானை என்பதும், இறந்து சுமார் 4 மாதங்கள் இருக்கலாம் எனவும் கண்டறியப்பட்டுள்ளது.


கோவை: கோவை தேவராயபுரம் வனப்பகுதியில் 5 வயது ஆண் குட்டி யானை மண்டை ஓடு மற்றும் எலும்புகள் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கோவை போளுவாம்பட்டி வனச்சரத்திற்கு உட்பட்ட நரசீபுரம் அருகே உள்ள தேவராயபுரம் வனப்பகுதியில் வனத்துறை ஊழியர்கள் ரோந்து சென்றனர். அப்போது ஒரு பகுதியில் இறந்த யானையின் மண்டை ஓடு மற்றும் சிதறிய எலும்புகள் கண்டறியப்பட்டது.

இதையடுத்து ஊழியர்கள் வனத்துறை அதிகாரிகளுக்கு தகவல் அளித்துள்ளனர்.



கால்நடை மருத்துவர் குழுவுடன் சம்பவ இடத்திற்கு சென்ற வனத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்த போது, இறந்தது சுமார் 5 வயதுடைய ஆண் யானை குட்டி என்பதும், இறந்து சுமார் 4 மாதங்கள் இருக்கலாம் எனவும் கண்டறியப்பட்டது.

யானையின் எலும்புக்கூடு, தந்தம் அதே பகுதியில் சிதறி கிடந்துள்ளது. இறந்து நீண்ட நாட்கள் ஆனதால் யானையின் இறப்புக்கான காரணம் குறித்து கண்டறிய முடியவில்லை என மருத்துவர் குழுவினர் தெரிவித்துள்ளனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...