கனிமவளக் கொள்ளையைக் கண்டித்து உண்ணாவிரதம் - பாஜக மாநில விவசாய அணி அறிவிப்பு!

கோவை மாவட்டத்தில் நடைபெறும் கனிவளக் கொள்ளையைக் கண்டித்து பத்தாயிரத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்கும் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப்படும் என்று பாஜக மாநில விவசாய அணித்தலைவர் ஜி.கே.நாகராஜ் தெரிவித்துள்ளார்.



கோவை மாவட்டத்தில் காட்டுப்பன்றிகளை சுட்டுக்கொல்ல நடவடிக்கை எடுக்கவும், வனவிலங்குகள் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தவும் கோரி பாஜக விவசாய அணி சார்பில், மாநில தலைவர் ஜி.கே.நாகராஜ் மாவட்ட ஆட்சியரை சந்தித்து மனு அளித்தார்.

அந்தமனுவில், தொண்டாமுத்தூர், பெரியநாயக்கன்பாளையம், காரமடை ஆகிய பகுதிகளில் விளை நிலங்களுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் காட்டுப்பன்றிகளை உடனடியாக சுட்டுக் கொல்ல நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

யானை, மயில், மான் ஆகியவற்றால் ஏற்படும் பாதிப்புகளுக்கு நிவாரணம் வழங்க வேண்டும். பொது மக்களுக்கும் இளைஞர்களுக்கும் வனவிலங்குகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி வனத்தை வளப்படுத்தும் முயற்சியில் இளைஞர்களை ஈடுபடுத்த வேண்டும் என கோரப்பட்டிருந்தது.

பின்னர் செய்தியாளர்களிடம் ஜி.கே.நாகராஜ் பேசியதாவது:

கிணத்துக்கடவு பகுதியில் கனிமவளக் கொள்ளை அதிகமாக உள்ளது. இதனைக் கண்டித்து சுமார் பத்தாயிரம் பேர் உண்ணாவிரத போராட்டம் மேற்கொள்ள திட்டமிட்டுள்ளது. அதற்குள் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியரிடம் கேட்டுக்கொண்டுள்ளோம்.

இதனை பரிசீலிப்பதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். கேரளாவில் இருந்து தொடர்ச்சியாக பல்வேறு கழிவுகள் கோவையில் கொட்டப்படுவதாகவும், அதற்கும் மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

காட்டுப்பன்றிகளை துப்பாக்கிகளைக் கொண்டு கட்டுப்படுத்துவதற்கு அனுமதி கேட்டு முயற்சி செய்து வருகிறோம். அன்னூர், தேக்கம்பட்டி ஆகிய பகுதிகளில் சுமார் ஐந்து லட்சம் வாழை மரங்கள் சூறைகாற்று கனமழை காரணமாக சாய்ந்துள்ளன.

மாவட்ட நிர்வாகம் ஏக்கர் கணக்கில் கணக்கிட்டு குறைந்த அளவு நிவாரணம் தராமல் ஒவ்வொரு மரத்திற்கும் கணக்கெடுத்து நிவாரணம் தர வேண்டும். பயிர் காப்பிடுதலில் மிகப்பெரிய பிரச்சனை உள்ளது. தோட்டக்கலை துறை மூலமாக விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்.

தேங்காய்களின் விலை கடுமையாக வீழ்ச்சி அடைந்துள்ளது. ரேஷன் கடைகளில் தேங்காய் எண்ணெய் தரப்பட வேண்டும். சிறுவாணி உட்பட சில அணைகள் தூர்வாரப் படாமல் இருக்கிறது. அதற்கும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். அரசாங்கத்தின் உதவி இல்லாமல் விவசாயம் செய்ய முடியாது. விவசாயம் செய்வதற்கு அரசு உதவி புரிய வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...