திருப்பூரில் 40 கடைகளுக்கு சீல் வைத்த அதிகாரிகள்

திருப்பூர் மாநகராட்சி நெருப்பெரிச்சல் பகுதியில் அனுமதி மீறி கட்டப்பட்ட ரூ.8 கோடி மதிப்பிலான 40 கடைகளுக்கு திருப்பூர் மாநகராட்சி அதிகாரிகள் சீல் வைத்தனர்.



திருப்பூர்: திருப்பூரில் அனுமதி மீறி கட்டப்பட்ட கடைகளுக்கு அதிகாரிகள் சீல் வைத்தனர்.



திருப்பூர் மாநகராட்சி நெருப்பெரிச்சல் பகுதியில் மாவட்ட பதிவாளர் அலுவலகம் அருகே சத்யா ரவிச்சந்திரன் என்பவருக்கு சொந்தமாக வர்த்தக கட்டிடம் கட்டப்பட்டு வந்தது.



இந்த கட்டிடம் 40 கடைகளுடன் கூடிய வர்த்தக கட்டிடமாக கட்டப்பட்டு வந்த நிலையில், மேற்படி கட்டிடம் அனுமதி பெற்றதற்கு மாறாக கட்டப்படுவதாகத் தொடர்ந்து புகார்கள் வந்தன.



இதையடுத்து திருப்பூர் மாநகராட்சி அதிகாரிகள் இன்று அந்த கட்டிட வளாகத்திற்கு சீல் வைத்தனர். 40 கடைகளும் பூட்டி சீல் வைக்கப்பட்டன.



திருப்பூரில் ரூ.8 கோடி மதிப்பிலான 40 கடைகளுக்கு சீல் வைக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...