கோவையில் இருந்து கேரளாவுக்கு 5.9 டன் ரேசன் அரிசி கடத்தி சென்றவருக்கு 3 ஆண்டுகள் சிறை விதிப்பு!

கோவையில் இருந்து கேரளாவிற்கு 5.9 டன் ரேசன் அரிசியை கடத்தி சென்ற சிவானந்தா காலணி பகுதியை சேர்ந்த அன்வர் பாஷா (48) என்பவருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.10,000 அபராதம் விதித்து, கோவை குற்றவியல் நீதிமன்ற நீதிபதி சரவணபாபு உத்தரவிட்டுள்ளார்.


கோவை: கோவையில் இருந்து கேரளாவிற்கு 5.9 டன் ரேசன் அரிசியை கடத்த முயன்ற நபருக்கு 3 ஆண்டுகள் சிறை மற்றும் ரூ.10,000 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

கோவையில் கடந்த 2008ஆம் ஆண்டு கோவை - பாலக்காடு சாலை குனியமுத்தூர் அருகே குடிமை பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு போலீசார் வாகன சோதனை மேற்கொண்டனர்.

அப்போது அவ்வழியாக கேரளாவிற்கு ஈச்சர் லாரி மூலம் ரேசன் அரிசியை கடத்தியதாக கோவை சிவானந்தா காலணி பகுதியை சேர்ந்த அன்வர் பாஷா (48), உக்கடம் பகுதியை சேர்ந்த ஆலிப்ராஜா ஆகிய இருவரை கைது செய்து, அவரிடமிருந்து 5.9 டன் ரேசன் அரிசி மற்றும் லாரியையும் பறிமுதல் செய்தனர்.

இந்த வழக்கு விசாரணை கோவை 4 ஆவது குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. விசாரணை நிறைவடைந்த நிலையில், முதல் குற்றவாளியான அன்வர் பாஷாவிற்கு 3 ஆண்டுகள் சிறை மற்றும் ரூ.10,000 அபராதம் விதித்து நீதிபதி சரவணபாபு உத்தரவிட்டுள்ளார்.

ஆலிப்ராஜா வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டார். இதே போல இவ்வழக்கில் சேர்க்கப்பட்ட காளிதாஸ் (43), ரவிராஜ் (43) ஆகியோரும் விடுதலை செய்யப்பட்டனர். மேலும், குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட அன்வர் பாஷா மீது 8 மாவட்டங்களில் ரேசன் அரிசி கடத்தல் வழக்கு நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...