மாநில விளையாட்டு மேம்பாட்டு அணி துணைச் செயலாளராக கார்த்திக் நியமனம் - தாராபுரத்தில் திமுகவினர் உற்சாக வரவேற்பு

தி.மு.க. மாநில விளையாட்டு மேம்பாட்டு அணியின் துணை செயலாளராக நியமிக்கப்பட்டுள்ள கார்த்திக்கிற்கு மூலனூரில் திமுக தொண்டர்கள் தாரை தப்பட்டை முழங்க கார்த்திக்கை கடைவீதி பகுதியில் ஊர்வலமாக அழைத்து வந்து வரவேற்பு கொடுத்தனர்.


திருப்பூர்: தி.மு.க. மாநில விளையாட்டு மேம்பாட்டு அணி துணை செயலாளராக எஸ்.கார்த்திக் புதியதாக நியமிக்கப்பட்டுள்ளார்.

இதைத் தொடர்ந்து, அவர் திருப்பூர் தெற்கு மாவட்டம் மூலனூர் ஒன்றிய அலுவலகமான கலைஞர் அறிவாலயத்திற்கு வந்தார்.



அப்போது, திமுக தொண்டர்கள் தாரை தப்பட்டை முழங்க கார்த்திக்கை கடைவீதி பகுதியில் ஊர்வலமாக அழைத்து வந்து வரவேற்பு கொடுத்தனர்.



இந்த நிகழ்ச்சியில், திருப்பூர் தெற்கு மாவட்ட செயலாளரும், திருப்பூர் மாநகராட்சி நான்காம் மண்டல தலைவருமான இல.பத்மநாபன், மூலனூர் (மேற்கு) ஒன்றிய செயலாளர் துரை தமிழரசு, மூலனூர் பேரூர் செயலாளரும் பேரூராட்சி தலைவருமான தெண்டபாணி,

கன்னிவாடி பேரூர் செயலாளர் சுரேஷ், குமாரபாளையம் ஊராட்சி மன்ற தலைவர் செல்லமுத்து மற்றும் நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...