காசி தமிழ்சங்க யாகத்தில் பங்கேற்ற தாராபுரம் ஆன்மீகக் குழு - இயமலை, ரிஷிகேஷ்-க்கும் சுற்றுப்பயணம்!

தாராபுரத்திலிருந்து முதல் முதலாக 40 பேர் கொண்ட குழு, காசி தமிழ் சங்க ஆன்மீக யாத்திரை சென்றுவந்துள்ளது. சாரதாஸ் எஸ். சண்முகவேல் தலைமையில் சென்ற இந்தக் குழுவில், பாஜக மாவட்ட துணைத்தலைவர் செல்வா பழனிச்சாமி உள்ளிட்டோர் பங்கேற்றிருந்தனர்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் தாராபுரம் காசி தமிழ் சங்கம் குழுவின் தலைவர் சாரதாஸ் எஸ். சண்முகவேல் தலைமையில் 40 பேர் கொண்ட குழு முதன் முதலாக காசி தமிழ் சங்கம் ஆன்மிக யாத்திரை சென்றது.

இந்த குழுவினர் கடந்த 15-ந் தேதி கோவையிலிருந்து விமானம் மூலம் ரிஷிகேஷ் பகுதியான இமயமலைக்கு சென்றனர். பின்னர் கங்கை நதியில் புனித நீராடினர். பிறகு காசி தமிழ் சங்க யாத்திரை நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ஆன்மிக சொற்பொழிவுகளை கேட்டு மகிழ்ந்தனர்.

பிறகு தாராபுரம் மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகத்துக்காக கங்கை நதியின் புனித நீரை தீர்த்தமாக எடுத்து கொண்டு வந்தனர். ஆன்மிக பயணத்தின் போது இமயமலை, ரிஷிகேஷ், ஹரித்துவார், புது டெல்லி உள்ளிட்ட இடங்களுக்கு சென்று வந்தனர்.

காசி தமிழ் சங்கம் யாகத்தில் தாராபுரத்தில் இருந்து பா.ஜ.க மாவட்ட துணைத் தலைவர் செல்வா பழனிச்சாமி, அ.தி.மு.க. தாராபுரம் கிழக்கு ஒன்றிய செயலாளர் கே.செல்வகுமார், த.மா.கா.வட்டார தலைவர் காளிதாஸ், கொங்கு முன்னேற்ற கழக நகர செயலாளர் சின்னசாமி, ரோட்டரி அறக்கட்டளை தலைவர் முத்துராமலிங்கம், மல்லி ரெஸ்டாரன்ட் நிர்வாக இயக்குனர் அர்சுணன் உள்ளிட்ட 40 பேர் ஆன்மிக பயணத்தில் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...