உடுமலையில் பயனாளிகள் தேர்வுக்கான சிறப்பு முகாம் - தோட்டக் கலைத்துறை ஏற்பாடு!

உடுமலை அடுத்த ரெட்டிபாளையம் கிராமத்தில், தோட்டக் கலைத்துறை சார்பில், பயனாளிகள் தேர்வுக்காக சிறப்பு முகாம் நடத்தப்பட்டது. இதில் கலந்து கொண்டவர்களுக்கு தோட்டக் கலை துறை சார்பில் செயல்படுத்தப்படும் மானியத் திட்டங்கள் குறித்து விளக்கப்பட்டது.



திருப்பூர்: à®‰à®Ÿà¯à®®à®²à¯ˆ அடுத்த ரெட்டிபாளையம் கிராமத்தில், தோட்டக் கலைத்துறை சார்பில், பயனாளிகள் தேர்வுக்கான சிறப்பு முகாம் நடைபெற்றது.

உடுமலை வட்டாரத்தில், கலைஞர் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ், தேர்வு செய்யப்பட்ட கிராமங்களுக்கு, சிறப்பு மானிய திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறது. அவ்வகையில், ரெட்டிபாளையம் கிராமத்தில், தோட்டக் கலைத்துறை சார்பில் சிறப்பு முகாம் நடத்தப்பட்டது.



வட்டார தோட்டக் கலைத்துறை இயக்குனர் மோகன ரம்யா தலைமையில் நடைபெற்ற இந்த முகாமில் தோட்ட கலைதுறை சார்பில், செயல்படுத்தப்படும் மானியத் திட்டங்கள், அதற்கு விண்ணப்பிக்கும் முறை குறித்து விளக்கமளிக்கப்பட்டது.

மேலும், பயனாளிகள் தேர்வுக்காக விளைநிலங்களில், அதிகாரிகள் நேரடி கள ஆய்வு செய்தனர். அப்பகுதியில் தென்னை சாகுபடியில் காணப்படும் நோய் மற்றும் பூச்சித்தாக்குதலை கட்டுப்படுத்தும் முறைகள் குறித்தும் முகாமில் விளக்கம் அளிக்கப்பட்டது.

ரெட்டிபாளையம் கிராம விவசாயிகள் மற்றும் தோட்ட கலைத்துறை உதவி அலுவலர் பிரியங்கா உட்பட அலுவலர்கள் பலரும் இந்த முகாமில் பங்கேற்றனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...