தாராபுரம் அருகே ரூ.14.10 லட்சம் மதிப்பில் சிமெண்ட் சாலை அமைக்கும் பணி - அமைச்சர் கயல்விழி துவக்கி வைத்தார்!

தாராபுரம் அடுத்த அலங்கியம் ஊராட்சியின் மேற்குத் தெருவில் சட்டமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியின் மூலம் ரூ.14.10 லட்சம் மதிப்பில் சிமெண்ட் சாலை அமைக்கும் பணியை, ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சரும், தாராபுரம் சட்டமன்ற உறுப்பினருமான கயல்விழி செல்வராஜ் கலந்து கொண்டு பணிகளை தொடங்கி வைத்தார்.


திருப்பூர்: தாராபுரம் அடுத்த அங்கியம் அருகே ரூ.14.10 லட்சம் மதிப்பில் சிமெண்ட் சாலை அமைக்கும் பணியை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் துவக்கி வைத்தார்.

தாராபுரம் அடுத்த அலங்கியம் ஊராட்சியின் மேற்குத் தெருவில் தாராபுரம் சட்டமன்ற தொகுதி மேம்பாட்டு நிதி 2022-23 மூலம் ரூ. 14.10 லட்சம் மதிப்பீட்டில் சிமெண்ட் சாலை அமைக்கும் பணிகள் நடைபெற உள்ளது.



இதற்கான துவக்க விழாவில் தமிழக ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சரும், தாராபுரம் சட்டமன்ற உறுப்பினருமான கயல்விழி செல்வராஜ் கலந்து கொண்டு பணிகளை தொடங்கி வைத்தார்.

இந்த நிகழ்வில், தாராபுரம் ஊராட்சி ஒன்றிய பெருந்தலைவர் மற்றும் தாராபுரம் ஒன்றிய கழக செயலாளர் செந்தில்குமார், தாராபுரம் ஊராட்சி ஒன்றிய துணை தலைவர் சசிக்குமார், அலங்கியம் ஊராட்சி மன்றத் தலைவர்,

திருப்பூர் தெற்கு மாவட்ட கழக இளைஞரணி துணை அமைப்பாளர், அலங்கியம் ஊராட்சி ஒன்றியக்குழு உறுப்பினர், தாராபுரம் ஒன்றிய கழக நிர்வாகிகள், அலங்கியம் ஊராட்சி கழக நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...