தாராபுரம் அருகே அரசுப் பேருந்தை சிறைபிடித்துப் பொதுமக்கள் போராட்டம்

தாராபுரம் அருகே தாயம்பாளையம் வழித்தடத்தில் இயக்கப்படும் அரசு பேருந்தை சிறைபிடித்து பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். பேருந்தினை முறையாக இயக்குவதில்லை என்றும் பொதுமக்கள் குற்றச்சாட்டியுள்ளனர்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் தாராபுரம், சூரியநல்லூர், ராசிபாளையம், தம்புரெட்டிபாளையம், தாயம்பாளையம் வழித்தடத்தில் காலை மற்றும் மாலை நேரத்தில் தினமும் செல்லக்கூடிய 7-ம் நம்பர் அரசு பஸ் சரிவர வராததை கண்டித்து பொதுமக்கள் மற்றும் 100 நாள் பணியாளர்கள் ராசிபாளையம் பகுதியில் பஸ்சை சிறை பிடித்து மறியலில் ஈடுபட்டனர்.

இந்த பேருந்து மூலமாக தாயம்பாளையம் அரசு பள்ளிக்கு செல்லக்கூடிய மாணவ-மாணவிகளும், அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு செல்லக்கூடிய நோயாளிகளும் மற்றும் இந்த கிராம பகுதிகளில் இருந்து நகரத்திற்கு செல்ல கூடியவர்களும் நாள்தோறும் பயணிக்கின்றனர்.

ஆனால், இந்த பேருந்து சரிவர வராததால் ஆவேசமடைந்த பொதுமக்கள், போராட்டத்தில் ஈடுபட முடிவு செய்தனர்.



அதன்படி, அந்த வழியாக வந்த அரசு பேருந்தை பொதுமக்கள் சிறை பிடித்தனர். தகவல் அறிந்த ஊதியூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் தேவராஜன், தாராபுரம் அரசு பேருந்து கிளை மேலாளர் ஆகியோர் நேரில் வந்து பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது, தினமும் உரிய முறையில் பேருந்து இயக்கப்படும் என்று அதிகாரிகள் உறுதியளித்ததை தொடர்ந்து பொதுமக்கள் போராட்டத்தைக் கைவிட்டனர்.

Newsletter

பொள்ளாச்சி அருகே தி.மு.க கவுன்சிலர் கணவர் மீது அரிவாள் தாக்குதல்; கை துண்டானதில் கைது

கோவை மாவட்டம் ஆனைமலை அருகே ஒடையகுளம் பேரூராட்சியில், தி.மு.க கவுன்சிலர் விஜயவாணியின் கணவர் முருகன் (52) மீது நிலத்தகராறு...

கோவை கணியூர் பார்க் கல்லூரியில் பிளாஸ்டிக் தவிர்ப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

கோவை கணியூரில் உள்ள பார்க் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி மற்றும் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை இணைந்து SHS 26 (ஸ்வ...

கோவை மதுக்கரை வனப்பகுதியில் விலங்கு தாக்குதலில் குட்டி யானை உயிரிழப்பு

கோவை மதுக்கரை வனச்சரகம் நவக்கரை பிரிவு புதுப்பதி பகுதியில் ஒரு குட்டி யானை ஊனுண்ணி வனவிலங்கு தாக்குதலில் உயிரிழந்தது. செ...

கோவையில் குப்பைகளை நான்கு வகையாக தரம் பிரிப்பது குறித்து கோலப்போட்டி

கோவை மாநகராட்சியின் வடக்கு மற்றும் மத்திய மண்டலங்களுக்கு உட்பட்ட கோ-ஆப்பரேட்டிவ் காலனி மற்றும் பாரதிநகர் பகுதிகளில், குப...

கோவை வடக்கு மண்டலத்தில் மழைநீர் வடிகால் பணிகளை நேரில் பார்வையிட்ட மாநகராட்சி ஆணையாளர்

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா, செப்டம்பர் 23, 2026 அன்று வடக்கு மண்டலப் பகுதிகளில் மழைநீர் வடிகால் பணிகளை நேரி...

மதுக்கரை சிமெண்ட் ஆலை நச்சுப்புகை: சாலை மறியல் போராட்டத்தில் நூற்றுக்கணக்கானோர் கைது

கோவை மதுக்கரை பகுதியில் செயல்படும் தனியார் சிமெண்ட் ஆலையில் இருந்து வெளியேறும் நச்சுப்புகையால் ஆயிரக்கணக்கான வீடுகள் மற்...