பல்லடத்தில் பயங்கரமாக மோதிக்கொண்ட 2 பேருந்துகள் - வைரலாகும் சிசிடிவி காட்சிகள்!

பல்லடம் பேருந்து நிலையம் அருகே கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு தனியார் பேருந்து மீது அரசு பேருந்து வேகமாக மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தின் சிசிடிவி காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது.


திருப்பூர்: பல்லடத்தில் அரசு பேருந்தும், தனியார் பேருந்தும் மோதிக் கொண்ட சிசிடிவி காட்சிகள் இணையத்தில் வைரலாகியுள்ளது.

திருப்பூரில் இருந்து கோவைக்கு நேற்றுமுன்தினம் பயணிகளை ஏற்றிக் கொண்டு தனியார் பேருந்து வந்து கொண்டிருந்தது. இந்த பேருந்து வலது புறமிருந்த பல்லடம் பேருந்து நிலையத்திற்குள் நுழைய திரும்பியுள்ளது.

அப்போது கோவையிலிருந்து மதுரைக்கு சென்று கொண்டிருந்த அரசு பேருந்து தனியார் பேருந்தின் மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் இரு பேருந்துகளிலிருந்த பயணிகளும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.

தற்போது இந்த விபத்தின் சிசிடிவி காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...