உடுமலை அருகே சின்னவீரன்பட்டி கிராமசபை கூட்டத்தில் எரிவாயு குறித்து விழிப்புணர்வு!

உடுமலை அடுத்த சின்ன வீரம்பட்டியில் மே தினத்தையொட்டி ஊராட்சி தலைவர் கலாவதி பழனிச்சாமி தலைமையில் கிராமசபை கூட்டம் நடைபெற்றது. இதில், செல்வி கேஸ் உரிமையாளர் அய்யப்பன், கலந்து கொண்டு பொதுமக்கள் எரிவாயு பயன்படுத்துவது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.


திருப்பூர்: உடுமலை அடுத்த சின்னவீரன்பட்டியில் மே தினத்தையொட்டி நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் எரிவாயு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

திருப்பூர் மாவட்டம் உடுமலை ஒன்றியம் சின்ன வீரம்பட்டியில் மே தினத்தை ஒட்டி கிராமசபை கூட்டம் நடைபெற்றது. சின்ன வீரம்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி பள்ளியில் ஊராட்சி தலைவர் கலாவதி பழனிச்சாமி தலைமையில் கிராமசபை கூட்டம் நடைபெற்றது.

இந்த கிராமசபை கூட்டத்தில் கிராம ஊராட்சியின் தணிக்கை அறிக்கை, சுத்தமான குடிநீர் வணிகத்தினை உறுதி செய்வது, கிராம வளர்ச்சி திட்டம், அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டம், அனைவருக்கும் வீடு கணக்கெடுப்பு, பிரதம மந்திரி கிராம சாலை திட்டம், ஜல் ஜீவன் மிஷன் இயக்கம் உள்ளிட்டவை குறித்த தீர்மானங்கள் விவாதிக்கப்பட்டது.



இதில் உடுமலை பாரத் கேஸ் விநியோகஸ்தரான செல்வி கேஸ் ஏஜென்சி உரிமையாளர் அய்யப்பன், கலந்து கொண்டு பொதுமக்கள் எரிவாயு பயன்படுத்துவது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தினார்.



எரிவாயுவை எவ்வாறு பயன்படுத்துவது, எரிவாயு சிக்கனம் மற்றும் எரிவாயுவை பாதுகாப்பாக கையாளுவது குறித்த வழிமுறைகள் பொதுமக்களுக்கு விளக்கப்பட்டது.

Newsletter

பொள்ளாச்சி அருகே தி.மு.க கவுன்சிலர் கணவர் மீது அரிவாள் தாக்குதல்; கை துண்டானதில் கைது

கோவை மாவட்டம் ஆனைமலை அருகே ஒடையகுளம் பேரூராட்சியில், தி.மு.க கவுன்சிலர் விஜயவாணியின் கணவர் முருகன் (52) மீது நிலத்தகராறு...

கோவை கணியூர் பார்க் கல்லூரியில் பிளாஸ்டிக் தவிர்ப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

கோவை கணியூரில் உள்ள பார்க் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி மற்றும் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை இணைந்து SHS 26 (ஸ்வ...

கோவை மதுக்கரை வனப்பகுதியில் விலங்கு தாக்குதலில் குட்டி யானை உயிரிழப்பு

கோவை மதுக்கரை வனச்சரகம் நவக்கரை பிரிவு புதுப்பதி பகுதியில் ஒரு குட்டி யானை ஊனுண்ணி வனவிலங்கு தாக்குதலில் உயிரிழந்தது. செ...

கோவையில் குப்பைகளை நான்கு வகையாக தரம் பிரிப்பது குறித்து கோலப்போட்டி

கோவை மாநகராட்சியின் வடக்கு மற்றும் மத்திய மண்டலங்களுக்கு உட்பட்ட கோ-ஆப்பரேட்டிவ் காலனி மற்றும் பாரதிநகர் பகுதிகளில், குப...

கோவை வடக்கு மண்டலத்தில் மழைநீர் வடிகால் பணிகளை நேரில் பார்வையிட்ட மாநகராட்சி ஆணையாளர்

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா, செப்டம்பர் 23, 2026 அன்று வடக்கு மண்டலப் பகுதிகளில் மழைநீர் வடிகால் பணிகளை நேரி...

மதுக்கரை சிமெண்ட் ஆலை நச்சுப்புகை: சாலை மறியல் போராட்டத்தில் நூற்றுக்கணக்கானோர் கைது

கோவை மதுக்கரை பகுதியில் செயல்படும் தனியார் சிமெண்ட் ஆலையில் இருந்து வெளியேறும் நச்சுப்புகையால் ஆயிரக்கணக்கான வீடுகள் மற்...