கோவையில் திட்டமிடும் குழு உறுப்பினர்கள் தேர்தலுக்கான வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு - ஆட்சியர் வெளியிட்டார்!

கோவை மாவட்ட திட்டமிடும் குழு உறுப்பினர்கள் தேர்தலில் வாக்களிக்க ஊரக மற்றும் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களை கொண்ட வரைவு வாக்காளர் பட்டியலை மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி வெளியிட்டார். மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் இதனை வெளியிட கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) அலர்மேல் மங்கை பெற்றுக் கொண்டார்.


கோவை: கோவை மாவட்ட திட்டமிடும் குழு உறுப்பினர்கள் தேர்தலில் வாக்களிப்பதற்காக தேர்வு செய்யப்பட்ட உறுப்பினர்கள் வாக்காளர்கள் பட்டியலை மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி வெளியிட்டார்.

கோவை மாவட்டத்திற்கு ஊரக பகுதியான மாவட்ட ஊராட்சியிலிருந்து 5 உறுப்பினர்களும் நகர்ப்புற பகுதிகளான பேரூராட்சிகள், நகராட்சிகள் மற்றும் மாநகராட்சியிலிருந்து 13 உறுப்பினர்கள் என மொத்தம் 18 உறுப்பினர்களை மாவட்ட திட்டமிடும் குழுவிற்கு தேர்ந்தெடுக்க தமிழ்நாடு அரசு அரசிதழில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி கோயம்புத்தூர் மாவட்ட திட்டமிடும் குழு உறுப்பினர்கள் தேர்தலில் வாக்களிக்க ஊரகம் மற்றும் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் தேர்ந்தெடுக்கப்பட்ட மாவட்ட ஊராட்சி உறுப்பினர்கள் மற்றும் நகர்ப்புற பகுதிகளான பேரூராட்சிகள், நகராட்சிகள் மற்றும் மாநகராட்சி வார்டு உறுப்பினர்களை கொண்ட வரைவு வாக்காளர் பட்டியல் மாவட்ட ஆட்சித்தலைவரால் வெளியிடப்பட்டது.

அதன்படி மாவட்ட ஊராட்சியில் உள்ள மொத்த உறுப்பினர்களின் எண்ணிக்கை 17 மாநகராட்சியில் உள்ள மொத்த உறுப்பினர்களின் எண்ணிக்கை 100, 7 நகராட்சிகளில் மொத்த உறுப்பினர்களின் எண்ணிக்கை 198, 33 பேரூராட்சிகளில் உள்ள மொத்த உறுப்பினர்களின் எண்ணிக்கை 513 ஆக மொத்தம் 825 உறுப்பினர்கள் உள்ளனர்.

மேட்டுப்பாளையம் மற்றும் பொள்ளாச்சி நகராட்சியில் 2 காலியிடங்களும், தாளியூர் பேரூராட்சியில் ஒரு காலியிடம் என மொத்தம் 3 காலியிடங்கள் உள்ளன. மேலும், 04.05.2023 அன்று இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...