கோவையில் வடக்கு மண்டல சாலை பணிகளுக்காக தனியார் நிறுவனங்கள் சார்பில் ரூ.8.80 லட்சம் வழங்கல்!

கோவை வடக்கு மண்டலம்‌ வார்டு எண்‌.27க்கு உட்பட்ட பாரதி காலனி பகுதியில்‌ நமக்கு நாமே திட்டத்தின் கீழ்‌, தனியார்‌ பங்களிப்புடன்‌ சமூக பொறுப்பு நிதியின் மூலம்‌ (CSR) 4 சாலைப்பணிகள்‌ மேற்கொள்வதற்காக தனியார்‌ நிறுவனத்தினர்‌ சார்பில் கோவை‌ மாநகராட்சி ஆணையர்‌ பிரதாப்பிடம் ரூ.8.80 லட்சத்திற்கான காசோலை வழங்கப்பட்டது.


கோவை: கோவை வடக்கு மண்டலத்தில் தனியார் பங்களிப்புடன் 4 சாலைகள் அமைக்கும் பணிக்காக தனியார் நிறுவனங்கள் சார்பில் 8.80 லட்சம் ரூபாய் மாநகராட்சி ஆணையர் பிரதாப்பிடம் வழங்கப்பட்டது.

நமக்கு நாமே திட்டத்தின் கீழ்‌ கோவை மாநகராட்சியின் வடக்கு மண்டலம் வார்டு எண்‌.27-க்குட்பட்ட பாரதி காலனி பகுதியில்‌ தனியார்‌ பங்களிப்புடன்‌ சமூக பொறுப்பு நிதியின் மூலம் ‌(CSR) 4 சாலைப்பணிகள்‌ மேற்கொள்ளப்பட உள்ளன.



இதற்காக AMERITORE INFRA PVT LTD சார்பில் ரூ.1.65 லட்சம், TEX-TECH INDUSTRIES PVT LTD சார்பில் ரூ.1.65 லட்சம் மற்றும் SRI VENKATESWARA CARBONIC GASES PVT LTD சார்பில் ரூ.2.50 லட்சம் மற்றும் AATHAVA GARMENTS INDIA PVT LTD சார்பில் ரூ.3 லட்சம் என மொத்தம் ரூ.8.80 லட்சம்‌ வழங்கப்பட்டது.



கோவை மாநகராட்சியின் பிரதான அலுவலகத்தில், மாநகராட்சி ஆணையர் பிரதாப்பிடம், ரூ.8.80 லட்சம் மதிப்பிலான காசோலை தனியார் நிறுவனங்கள் சார்பில் வழங்கப்பட்டது.



இந்த நிகழ்வின் போது 27வது வார்டு மாமன்ற உறுப்பினர்‌ அம்பிகா தனபால்‌ மற்றும்‌ தனியார்‌ நிறுவனத்தினர்‌ உடனிருந்தனர்‌.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...