கனமழை, வெள்ளப்பெருக்கால் மதுக்கரை தரைப்பாலத்தில் உடைப்பு - நகராட்சி தலைவர் நேரில் ஆய்வு!

கோவை மாவட்டத்தில் பெய்த கனமழை காரணமாக மஞ்சப்பள்ளம் ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில், மதுக்கரை தரைப்பாலத்தில் உடைப்பு ஏற்பட்டது. இங்கு மதுக்கரை நகராட்சி தலைவர் நூர்ஜகான் நாசர் நேரில் ஆய்வு மேற்கொண்டு, சீரமைப்பு பணிகளை மேற்கொள்ள உத்தரவிட்டார்.


கோவை: கனமழை காரணமாக ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில், மதுக்கரை தரைப்பாலம் உடைந்து வெளியேறிய நீரில் சாலை முழுவதுமாக சேதமடைந்து நீரில் அடித்து செல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோவை மதுக்கரை சுற்றுவட்டார பகுதிகளில் பெய்த தொடர் கனமழையால் மஞ்சப்பள்ளம் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இந்நிலையில், மதுக்கரை ஆற்று விநாயகர் கோவில் அருகே இருந்த தரைப்பாலம் வெள்ள நீரில் மூழ்கியது.



இதனை தொடர்ந்து தரைப்பாலத்தில் உடைப்பு ஏற்பட்டதால், மதுக்கரை - குரும்பபாளையம் இடையே செல்லும் தார் சாலை முழுமையாக சேதமடைந்து நீரில் அடித்து செல்லப்பட்டுள்ளது. மேலும், மதுக்கரை சாலையில் உள்ள மின்கம்பமும் சாய்ந்ததால் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2020ல் 50 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட தரைப்பாலத்தை முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி திறந்து வைத்தார். ஆனால் தரைப்பாலத்தின் கீழ் நீர் செல்ல போதிய வழியை ஏற்படுத்தாமல் அவசரகதியில் பணிகள் முடிக்கப்பட்டதே வெள்ள நீர் வெளியேறி பாலம் உடைவதற்கு காரணம் என பொதுமக்கள் குற்றம்சாட்டி உள்ளனர்.



இந்நிலையில் மதுக்கரை தரைப்பாலம் மற்றும் சாலை அடித்து செல்லப்பட்ட பகுதியில் மதுக்கரை நகராட்சி தலைவர் நூர்ஜகான் நாசர், கவுன்சிலர்கள், அதிகாரிகள் உள்ளிட்டோர் ஆய்வு மேற்கொண்டு, சீரமைப்பு பணிகளை மேற்கொள்ள உத்தரவிட்டுள்ளனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...