கோவையில் வளர்ப்பு நாய் மீது கொடூர தாக்குதல் - மர்ம நபர் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு!

கோவை மாவட்டம் காளப்பட்டி அருகே பாலதண்டாயுதபாணி என்பவருக்கு சொந்தமான வளர்ப்பு நாயை, கற்களாலும், கட்டையாலும் சரமாரியாக தாக்கிவிட்டு தப்பிச்சென்ற மர்ம நபர் மீது, விலங்குகள் வதை தடுப்புச் சட்டம் உள்பட மூன்று பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.


கோவை: கோவை காளப்பட்டி அருகே வளர்ப்பு நாயை தாக்கி விட்டு தப்பிச் சென்ற மர்மநபர் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

கோவை மாவட்டம் காளப்பட்டி பாலாஜி நகர் பகுதியில் சேர்ந்தவர் பாலதண்டாயுதபாணி (48). இவர் தனது வீட்டில் வளர்ப்பு நாய் ஒன்றை வைத்து பராமரித்து வருகிறார்.

இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர் ஒருவர் பாலதண்டாயுதபாணி வீட்டு வளாகத்திற்குள் புகுந்து அவரது வளர்ப்பு நாயை கட்டை மற்றும் கல்லால் கடுமையாக தாக்கி விட்டு அங்கிருந்து தப்பிச் சென்றதாக கூறப்படுகிறது.

நாயின் அலறல் சத்தம் கேட்டு வந்து பார்த்தபோது மர்ம நபர் நாயை தாக்கி விட்டு தப்பி சென்றது தெரியவந்தது. இதையடுத்து பாலதண்டாயுதபாணி பீளமேடு காவல்நிலையத்தில் புகார் அளித்தார்.

இந்த புகார் அடிப்படையில் விலங்குகள் வதை தடுப்புச் சட்டம் உள்பட மூன்று பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்த போலீசார் நாயை கொடூரமாக தாக்கிய மர்ம நபரை தேடி வருகின்றனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...