கோவையில் மழைநீர் வடிகால் பணிகள் குறித்து மேயர் கல்பனா நேரில் ஆய்வு - விரைந்து முடிக்க அதிகாரிகளுக்கு உத்தரவு!

கோவை‌ மாநகராட்சி கோணவாய்க்கால்பாளையம்‌ மற்றும் செல்வபுரம் ஆகிய பகுதிகளில் நடைபெற்று வரும் மழைநீர் வடிகால் மற்றும் தார்ச்சாலை அமைக்கும் பணிகளை நேரில் ஆய்வு செய்த மேயர் கல்பனா, பணிகளை 15 நாட்களுக்குள் முடித்து மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர உத்தரவிட்டார்.


கோவை: கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் மழைநீர் வடிகால் பணிகள் குறித்து மேயர் கல்பனா ஆனந்தகுமார் நேரில் ஆய்வு மேற்கொண்டார்.

கோவை மாநகராட்சியின் தெற்கு மண்டலம்‌ வார்டு எண்‌.99 மற்றும்‌ 85க்கு உட்பட்ட கோணவாய்க்கால்பாளையம்‌ பகுதியில்‌ நெடுஞ்சாலைத்துறை மூலம்‌ நடைபெற்று வரும்‌ மழைநீர் வடிகால்‌ மற்றும்‌ தார்‌ சாலை அமைக்கும்‌ பணிகளை மேயர்‌ கல்பனா ஆனந்தகுமார்‌ மற்றும் மாநகராட்சி ஆணையாளர்‌ பிரதாப்‌ ஆகியோர்‌, நேரில்‌ சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.



பின்னர் மழைநீர்‌ வடிகால்‌ மற்றும்‌ தார்‌ சாலை அமைக்கும்‌ பணிகளை 15 தினங்களுக்குள்‌ முடித்து பொதுமக்கள்‌ பயன்பாட்டிற்கு கொண்டு வரவும்,‌ சாலையோர ஆக்கிரமிப்புகளை அகற்றிடவும்‌ பொறியாளர்களுக்கு உத்தரவிட்டனர்‌.



அதனைத்தொடர்ந்து, தெற்கு மண்டலம்‌ வார்டு எண்‌.79க்கு உட்பட்ட செல்வபுரம்‌ பகுதியில்‌ நேரில்‌ சென்று பார்வையிட்டு ஆய்வு செய்த மேயர்‌ கல்பனா‌, அப்பகுதியிலுள்ள மழைநீர்‌ வடிகாலை தூர்வாரவும்‌, புதிதாக மழைநீர்‌ வடிகால்‌ கட்ட உரிய திட்ட மதிப்பீடு தயாரிக்கவும்‌ சம்பந்தப்பட்ட பொறியாளருக்கு உத்தரவிட்டார்‌.

Newsletter

பொள்ளாச்சி அருகே தி.மு.க கவுன்சிலர் கணவர் மீது அரிவாள் தாக்குதல்; கை துண்டானதில் கைது

கோவை மாவட்டம் ஆனைமலை அருகே ஒடையகுளம் பேரூராட்சியில், தி.மு.க கவுன்சிலர் விஜயவாணியின் கணவர் முருகன் (52) மீது நிலத்தகராறு...

கோவை கணியூர் பார்க் கல்லூரியில் பிளாஸ்டிக் தவிர்ப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

கோவை கணியூரில் உள்ள பார்க் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி மற்றும் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை இணைந்து SHS 26 (ஸ்வ...

கோவை மதுக்கரை வனப்பகுதியில் விலங்கு தாக்குதலில் குட்டி யானை உயிரிழப்பு

கோவை மதுக்கரை வனச்சரகம் நவக்கரை பிரிவு புதுப்பதி பகுதியில் ஒரு குட்டி யானை ஊனுண்ணி வனவிலங்கு தாக்குதலில் உயிரிழந்தது. செ...

கோவையில் குப்பைகளை நான்கு வகையாக தரம் பிரிப்பது குறித்து கோலப்போட்டி

கோவை மாநகராட்சியின் வடக்கு மற்றும் மத்திய மண்டலங்களுக்கு உட்பட்ட கோ-ஆப்பரேட்டிவ் காலனி மற்றும் பாரதிநகர் பகுதிகளில், குப...

கோவை வடக்கு மண்டலத்தில் மழைநீர் வடிகால் பணிகளை நேரில் பார்வையிட்ட மாநகராட்சி ஆணையாளர்

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா, செப்டம்பர் 23, 2026 அன்று வடக்கு மண்டலப் பகுதிகளில் மழைநீர் வடிகால் பணிகளை நேரி...

மதுக்கரை சிமெண்ட் ஆலை நச்சுப்புகை: சாலை மறியல் போராட்டத்தில் நூற்றுக்கணக்கானோர் கைது

கோவை மதுக்கரை பகுதியில் செயல்படும் தனியார் சிமெண்ட் ஆலையில் இருந்து வெளியேறும் நச்சுப்புகையால் ஆயிரக்கணக்கான வீடுகள் மற்...