கோவையில் தங்க நகை வியாபாரிகளிடம் பணம் கொள்ளையடித்த வழக்கு - மேலும் 2 பேர் கேரளாவில் கைது!

கோவை க.க.சாவடி அருகே கேரள நகை வியாபாரிகளான ரோகித் மற்றும் பரத் ஆகியோரிடம் ஆயுதத்தைக் காட்டி மிரட்டி ரூ.4.லட்சம் கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில் பாலக்காடு மாவட்டத்தை சேர்ந்த பிரமோத், சுனில் என மேலும் இருவரை தனிப்படை போலீசார் கேரளாவில் கைது செய்துள்ளனர்.


கோவை: கேரள மாநிலம் பாலக்காட்டை சேர்ந்தவர் ரோகித், மற்றும் பரத்.

தங்க நகை வியாபாரிகளான இவர்கள் இருவரும் கடந்த மார்ச் 26 ஆம் தேதி 600 கிராம் தங்கத்தை கோவை ராஜவீதியை சேர்ந்த மொத்த நகை வியாபாரியான நந்த கணேஷ், என்பவரிடம் விற்று விட்டு பணத்தை பெற்றனர். பின்னர் கோவையிலேயே தங்கிவிட்டு மறுநாள் அதிகாலை, தங்களது இருசக்கர வாகனத்தில் கேரளாவை நோக்கி சென்று கொண்டிருந்தனர்.

க.க.சாவடியில் இருந்து வேலந்தாவளம் ரோட்டில் பிச்சனூர் அருகே செல்லும்போது, கார் மற்றும் இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் இருவரையும் வழிமறித்து கத்தியை காட்டி மிரட்டி அவர்களிடமிருந்த ரூ.4 லட்சத்தை பறித்துக்கொண்டு தப்பியோடிவிட்டனர்.

இது தொடர்பாக பரத் க.க.சாவடி காவல்நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார், தனிப்படை அமைத்து தப்பியோடிய குற்றவாளிகளை தேடி வந்தனர். இந்நிலையில் கேரள மாநிலத்தில் பதுங்கியிருந்த பாலக்காட்டை சேர்ந்த மிதூன் (வயது28), ரஞ்சித்(வயது22) அபினேஸ்(வயது27), ரஞ்சித்குமார்(வயது32) ஆகிய நான்கு பேரை ஞாயிற்றுகிழமை கைது செய்தனர்.

மேலும், தலைமறைவாக உள்ள சிலரை தேடி கேரளாவில் முகாமிட்ட தனிப்படை போலீசார், பாலக்காடு மாவட்டம் கொழிஞ்சாபாறையை சேர்ந்த பிரமோத் (வயது34), சுனில் (வயது46) ஆகிய இருவரை நேற்று கைது செய்தனர். இருவரையும் கோவை அழைத்து வந்து விசாரணை மேற்கொண்ட போலீசார், பின்னர் அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...