தமிழகத்தில் தொடர்மழை எதிரொலி - கோவையில் மல்லிகைப்பூ விலை உயர்வு

தமிழகத்தில் பெய்துவரும் தொடர்மழையால், கோவை பூமார்கெட்டில் மல்லிகைப் பூ இன்று அதிரடியாக உயர்ந்து கிலோ ரூ. 600க்கு விற்பனையாகிறது. இதேபோல், முல்லை கிலோ ரூ.240க்கும், சாமந்தி கிலோ ரூ.380க்கும் விற்கப்பட்டது.


கோவை: வடகோவை பகுதியில் உள்ள பூமார்க்கெட் டுக்கு நீலகிரி, மேட்டுப்பாளையம், சத்தியமங்கலம், ஈரோடு, திண்டுக்கல், நிலக்கோட்டை உள்ளிட்ட பல பகுதிகளில் இருந்து நாள்தோறும் உதிரிப்பூக்கள் விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது.

கோடை காலம் தொடங்கியது முதல் பூக்கள் உற்பத்தி அதிகரித்ததால், உதிரிப்பூக்களின் விலை வீழ்ச்சியடைந்து இருந்தது. அதன்படி, கடந்த இரண்டு மாதங்களாக, மல்லிகை விலை கிலோ 300 ரூபாய்க்கு மேல் உயரவில்லை. இதேபோல், மற்ற உதிரிப்பூக்களும் குறைந்த விலைக்கே விற்பனையானது.

இந்தநிலையில், தமிழகத்தில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து பெய்து வரும் கனமழையால், பூக்கள் உதிர்ந்து உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.

இதனால், கோவை பூ மார்க்கெட்டுக்கு வரும் மல்லிகைப்பூ வரத்து குறைந்ததால், அதன் விலை அதிகரித்துள்ளது.

2 மாதங்களாக ரூ.300 ஆக இருந்த ஒரு கிலோ மல்லிகைப் பூ நேற்று ரூ. 600க்கு விற்பனையானது.

இதேபோல், சாமந்தி கிலோ, 380 ரூபாய்க்கும், முல்லை கிலோ, 240 ரூபாய்க்கும், பன்னீர் ரோஜா கிலோ, 320 ரூபாய்க்கும், சம்பங்கி 80 ரூபாய்க்கும் விற்கப்பட்டது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...