கோவை அருகே சந்தனமரம் வெட்டிக்கடத்தல் - 7 பேரை கைது செய்த வனத்துறை!

கோவை பெரியநாயக்கன்பாளையம் வனச்சரகத்திற்கு உட்பட்ட கூடலூர் பகுதியில் சந்தன மர திருட்டில் ஈடுபட்ட 7 பேரை பெரியநாயக்கன்பாளையம் வனத்துறையினர் கைது செய்தனர். அவர்களுக்கு வனத்துறை சார்பில் ரூ. 1 லட்சம் அபராதமும் விதிக்கப்பட்டது.


கோவை: கோவை பெரியநாயக்கன்பாளையம் அருகில் கூடலூர் கிராமத்தில் அரசு நிலத்தில், கட்டுமானம் ஏற்படுத்த, அங்கிருந்த பல மரங்களை வெட்டும்பொழுது,

அதில் இருந்த ஒரு சந்தன மரத்தையும் வெட்டி, அதன் அடித்துண்டை செதுக்கி, கடத்திச் சென்று விட்டதாக பெரியநாயக்கன்பாளையம் வனத்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

தகவல் அறிந்த பெரியநாயக்கன்பாளையம் வனச்சரக அலுவலர் தலைமையிலான வனத்துறையினர், தீவிர விசாரணை நடத்தி வந்தனர்.

இந்நிலையில், மரங்களை வெட்டி கடத்திச் சென்ற 7 நபர்களை பிடித்து, கடத்திச் சென்ற 4 சந்தன மரத் துண்டுகளையும் கைப்பற்றினர்.

அவர்கள் மீது குற்ற வழக்கு பதிவு வனத்துறையினர், கோவை மாவட்ட வன அலுவலர் உத்தரவின் பேரில், கடத்தலுக்கு மூளையாக செயல்பட்ட முதல் இரு எதிரிகளுக்கு தலா ரூ.25,000/- வீதமும், வெட்டிக் கடத்தும் பணிக்கு உறுதுணையாக இருந்த மற்ற ஐந்து எதிரிகளுக்கு தலா ரூ.10,000/- வீதமும், ஆக மொத்தம் ரூ.1,00,000/- அபராதம் விதித்தனர்.

Newsletter

கோவையில் வட்டிப் பணத்தை வசூலிக்க சென்ற பைனான்சியர் கொலை: ராஜஸ்தான் நபர் கைது

கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியில் பைனான்சியர் அபுதாகிர் பாஷா கொலை செய்யப்பட்ட வழக்கில், வட்டிக்குப் பெற்ற பணத்தை திரும்பக் கே...

கோவை மாநகராட்சி புதிய ஆணையாளர் கட்டா ரவி தேஜாவை வாழ்த்திய மேயர்

கோயம்புத்தூர் மாநகராட்சியின் புதிய ஆணையாளராக கட்டா ரவி தேஜா IAS இன்று பொறுப்பேற்றார். மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன்...

உலகப் புகையிலை ஒழிப்பு தினம்: கோவையில் மாணவர்கள் உறுதிமொழி ஏற்பு மற்றும் விழிப்புணர்வு பேரணி

உலகப் புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி கோவை ராயல் கேர் நர்சிங் கல்லூரியில் மாவட்ட புகையிலை கட்டுப்பாட்டு மையம் மற்றும் CSW...

உலக புகையிலை எதிர்ப்பு தினம்: ‘46 நண்பர்கள் சமூக சேவை அறக்கட்டளை’ சார்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி

உலக ‘46 நண்பர்கள் சமூக சேவை அறக்கட்டளை’ மற்றும் சுமதி மருத்துவமனை இணைந்து நடத்திய விழிப்புணர்வு நிகழ்ச்சியில், பெரியநாயக...

சூலூர் சிறுமி வழக்கு: குற்றவாளிகளை 3 நாள் காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் கைதான கார்த்திக், மோகன்ராஜை மூன்று நாட்கள் காவல...

கோவை மாவட்ட பொறுப்பு அமைச்சராக பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நியமனம்

முதல்வர் விஜய் தலைமையிலான தமிழக அரசு அனைத்து மாவட்டங்களுக்கும் பொறுப்பு அமைச்சர்களை நியமித்துள்ளது. அதன்படி கோவை மாவட்டத...