விலங்குவதைச் சட்டம் பற்றிய விழிப்புணர்வு பயிற்சி வகுப்பு - கோவை காவல் அதிகாரிகள், காவலர்கள் பங்கேற்பு

கோவை மாவட்ட காவல்துறையினருக்கு விலங்குகள் மீதான குற்றத்தடுப்பு மற்றும் விலங்குகள் வதை சட்டம்பற்றிய விழிப்புணர்வு பயிற்சி வகுப்பு நடைபெற்றது. இதில், காவல்துறையைச் சேர்ந்த 35 காவல் அதிகாரிகள் மற்றும் காவலர்கள் பங்கேற்றனர்.


கோவை: கோவை மாவட்ட எஸ்.பி பத்ரிநாராயணன் உத்தரவின் பேரில் விலங்குகளுக்கு எதிரான குற்றங்கள் மீது எடுக்கப்படும் சட்ட ரீதியான நடைவடிக்கைகள் பற்றி அறிந்து கொள்ள கோவை மாவட்ட காவல் துறையினருக்கு



DOGS OF COIMBATORE என்ற தன்னார்வ அமைப்பின் நிறுவனர் கேசிகா ஜெயபாலன் மற்றும் உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் மீனாட்சி, மதுமிதா மற்றும் விலங்கு நல ஆர்வலர் ஆண்டனி ரூபின்குழு உதவியுடன் விலங்குகள் மீதான குற்றம் தடுப்பு மற்றும் விலங்குகள் வதை சட்டம் பற்றி விழிப்புணர்வு பயிற்சி வகுப்பு நடைபெற்றது. இதில், 35 காவல் அதிகாரிகள் மற்றும் காவலர்கள் கலந்து கொண்டனர்.



இந்த பயிற்சி வகுப்பை கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரிநாராயணன் தொடங்கிவைத்து, காவல் அதிகாரிகள் மற்றும் ஆளினர்களுக்கு நற்சான்றிதழ்கள் வழங்கி அவர்களை விலங்கு நல தொடர்பு அதிகாரிகளாகவும் நியமித்தார்.

மேலும், Society for Prevention of Cruelty to Animals என்ற தன்னார்வ நிறுவனத்தின் உதவியுடன் கோவை மாவட்ட காவலர்களுக்கு, மிருகங்கள் சித்திரவதை தொடர்பாக வரும் புகார்களுக்கு சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டிய வழிமுறைகள் பற்றி விளக்கி, 14 சட்ட விதிகள் அடங்கிய போஸ்டர்களை காவல் நிலையத்தில் மக்கள் அறிந்து கொள்ள வேண்டி வெளியிட்டார்.

இந்த நிகழ்ச்சியில் கால்நடை பராமரிப்புத்துறை செயலாளர் சிபிஎஸ்பிசிஏ, டாக்டர் கே. சங்கர் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...