வால்பாறையில் வனத்துறை அமைச்சர் மதிவேந்தன் ஆய்வு!

கோவை மாவட்டம், வால்பாறை இஞ்சிப்பாறை எஸ்டேட்டில் பகுதியில் கரடி தாக்கி மருத்துவமனைகளில் சிகிச்சைப் பெற்று வரும் தொழிலாளர்களை அமைச்சர் மதிவேந்தன் சந்தித்து நலம் விசாரித்தார்.



கோவை: வால்பாறையில் ஆனைமலை புலிகள் காப்பாற்றுவதற்கு உட்பட்ட டாப்சிலிப் வால்பாறை, மானாம்பள்ளி போன்ற வனப்பகுதிகளில் வனத்துறை அமைச்சர் டாக்டர் மதிவேந்தன் ஆய்வு செய்தார்.



கோவை மாவட்டம் வால்பாறையில் ஆனைமலை புலிகள் காப்பாற்றுவதற்கு உட்பட்ட டாப்சிலிப், வால்பாறை, மானாம்பள்ளி போன்ற வனப்பகுதிகளில் வனத்துறை அமைச்சர் டாக்டர் மதிவேந்தன் நேற்று முதல் ஆய்வு செய்தார்.



இன்று வால்பாறைக்கு வருகை தந்த வனத்துறை அமைச்சர் சில தினங்களுக்கு முன்பு தேயிலை தோட்டத்தில் வேலை செய்து வந்த தொழிலாளர்கள் சிறுத்தை தாக்கியவரையும், கரடி தாக்கியவரையும், தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் இருவரையும் சந்தித்து சிறுத்தை தாக்கிய வடமாநில தொழிலாளர் அணில் ஒரான் என்பவருக்கு ஐந்தாயிரம் நிவாரணம் வழங்கி அவருடைய உடல் நிலையை பற்றி மருத்துவரிடம் கேட்டறிந்தார்.



பின்பு இஞ்சிப்பாறை எஸ்டேட்டில் பகுதியில் கரடி தாக்கிய ஐயப்பன் என்பவரை சந்தித்து அவருக்கு பத்தாயிரம் ரூபாய் நிதி உதவி அளித்து அவருடைய உடல் நலத்தை கேட்டறிந்தார். அதன் பின்பு எஸ்டேட் பகுதியில் சிறுத்தை தாக்கிய இடத்திற்கு சென்று அங்கு சிறுத்தை நடமாட்டத்தை கண்டறிய வைக்கப்பட்ட தானியங்கி கேமராவை பார்வையிட்டு மனித வன விலங்கு மோதலை தடுக்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி அதை மக்களை அச்சுறுத்தாத வண்ணம் செயல்படுத்துவது என்று வனத்துறை அதிகாரியிடம் ஆலோசனை செய்தார்.

உடன் மாவட்ட வனத்துறை அலுவலர் மற்றும் ஆனைமலை புலிகள் காப்பக இயக்குனர், வன சரகர்கள் ஆகியோர் இருந்தனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...