வால்பாறையில் குழந்தைகள் காப்பகம், கோயிலை சேதப்படுத்திய யானைகள்!

கோவை மாவட்டம் வால்பாறை அருகே குடியிருப்புப் பகுதியில் புகுந்த 4 காட்டு யானைகள், அங்கிருந்த குழந்தைகள் காப்பகம், ரேஷன் கடை, கோவில் ஆகியவற்றை உடைத்து சேதப்படுத்தின. இதனால் அப்பகுதி மக்கள் அச்சமடைந்துள்ளனர். யானைகளை வனப்பகுதிக்குள் விரட்டும்படியும் கோரிக்கை விடுத்துள்ளனர்.



கோவை: வால்பாறை சுற்றுவட்டார எஸ்டேட் பகுதிகளில் சில தினங்களாக யானைகளின் நடமாட்டம் காணப்படுகிறது.

இந்த நிலையில் நேற்று இரவு வால்பாறை அருகே பன்னிமேடு எஸ்டேட் பகுதியில் நான்கு காட்டு யானைகள் வனப்பகுதியில் இருந்து வெளியேறி குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்தன.



அப்போது, அங்கிருந்த குழந்தைகள் காப்பகம், கோவில், நியாய விலை கடை, எஸ்டேட் பொருட்கள் வைக்கும் அறை ஆகியவற்றின் ஜன்னல், கதவு, சுவர், உள் இருந்த பொருட்கள் போன்றவற்றை உடைத்து சூறையாடின.



பின்னர் அந்த காட்டு யானைகள், எஸ்டேட் வாகனத்தின் மூலம் வனப் பகுதிக்குள் விரட்டப்பட்டன.



காட்டு யானைகளின் நடமாட்டம் அதிகரித்து வருவதால், அவை குடியிருப்பு பகுதிகளுக்குள் வராமல் வனத்துறையினர் தடுத்து பொதுமக்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டுமென கோரிக்கை எழுந்துள்ளது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...