நீலகிரியில் களைகட்டும் கோடை சீசன் - கோத்தகிரியில் 12வது காய்கறி கண்காட்சி தொடக்கம்!

கோத்தகிரி நேரு பூங்காவில் இன்று 12-வது காய்கறி கண்காட்சி தொடங்கியுள்ளது. 600 கிலோ குடைமிளகாய், 250 கிலோ பஜ்ஜி மிளகாய் கொண்டு 15 அடி உயரத்திற்கு உருவாக்கப்பட்ட மக்காச்சோளம் உருவம், 650 கிலோ உருளை கிழங்கால் உருவாக்கப்பட்ட கம்பு செடி உருவம் சுற்றுலா பயணிகளை வெகுவாக கவர்ந்துள்ளன.


நீலகிரி: மலைகளின் அரசி என்று அழைக்கப்படும் நீலகிரி மாவட்டத்தில் கோடை சீசன் களைகட்டி வருகிறது. இங்கு நிலவும் இதமான காலநிலையை அனுபவிக்க நாள்தோறும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வருகை தருகின்றனர்.

இங்கு வரும் சுற்றுலா பயணிகளை மகிழ்விக்க மாவட்ட நிர்வாகம், தோட்டகலைத் துறை, சுற்றுலா துறை சார்பில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தபடுகின்றன.



இந்நிலையில், கோடை சீசனின் முதல் நிகழ்ச்சியாக கோத்தகிரி நேரு பூங்காவில் 12-வது காய்கறி கண்காட்சி இன்று தொடங்கியது.



இந்த காய்கறி கண்காட்சியில் 600 கிலோ குடைமிளகாய், 250 கிலோபஜ்ஜி மிளகாய் கொண்டு 15 அடி உயரத்திற்கு உருவாக்கப்பட்ட மக்காச்சோளம் உருவம், 650 கிலோ உருளை கிழங்கால் உருவாக்கப் பட்ட கம்பு செடி உருவம், பூசணி காய்களால் உருவாக்கப்பட்ட ராட்சத டிராகன், கத்திரிக்காய்களால் உருவாக்கபட்ட 3 யானைகள் ஆகியவை சுற்றுலா பயணிகளை வெகுவாக கவர்ந்தன.



இதுதவிர, 31 காய்கறிகளால் உருவாக்கபட்ட பல்வேறு உருவங்கள் கண்ணை கவரும் வகையில் அமைந்திருந்தன.



மேலும், பல்வேறு மாவட்டங்கள் சார்பில் அமைக்கப்பட்ட அரங்குகளில் காய்கறிகளால் அலங்கரிக்கபட்ட பாண்டா கரடி, பவானிசாகர் அணை, இருவாச்சி பறவை, ஒட்டக சிவிங்கி, வரையாடுகள், மயில், பாகற்காயால் உருவாக்கப்பட்ட முதலை ஆகியவையும் சுற்றுலாப் பயணிகளின் கவனத்தை ஈர்த்துவருகின்றன.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...