காதல் விவகாரத்தில் தற்கொலை குறுஞ்செய்தி அனுப்பிய கோவை கல்லூரி மாணவி மாயம்

கோவையில் தனியார் மருத்துவமனையில் பயிற்சி பெற்று வந்த கேரளாவைச் சேர்ந்த 23 வயதான கல்லூரி மாணவி மாயமான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பெற்றோர் அளித்த புகாரின் பேரில் ராமநாதபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து மாணவியை தேடி வருகின்றனர்.


கோவை: கேரள மாநிலம் எர்ணாகுளத்தைச் சேர்ந்த 23 வயதான மாணவி, கோவையில் உள்ள தனியார் கல்லூரியில் மயக்கமருந்தியல் படிப்பை முடித்த பின், அங்குள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் பயிற்சி பெற்று வந்தார்.

இந்நிலையில், அவருடன் படித்த மாணவருடன் காதலில் இருந்ததாக கூறப்படுகிறது. இதை அறிந்த பெற்றோர், அந்த உறவுக்கு கடுமையாக எதிர்ப்பு தெரிவித்ததுடன், சில நாட்களுக்கு முன்பு தொலைபேசியில் தொடர்பு கொண்டு காதலை கைவிடுமாறு அறிவுறுத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதனால் மனவேதனை அடைந்த மாணவி, தற்கொலை செய்து கொள்ளப் போவதாக பெற்றோருக்கு வாட்ஸ்அப் மூலம் குறுஞ்செய்தி அனுப்பியதாக கூறப்படுகிறது. அதிர்ச்சி அடைந்த பெற்றோர் மீண்டும் தொடர்பு கொள்ள முயன்றபோது, மாணவியின் செல்போன் அணைக்கப்பட்டிருந்தது.

உடனடியாக கோவைக்கு வந்த பெற்றோர், மாணவி தங்கி இருந்த அறையை பார்த்தபோது அவர் அங்கு இல்லாதது தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் அளித்த புகாரின் பேரில் ராமநாதபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, மாயமான மாணவியை தீவிரமாக தேடி வருகின்றனர்.


Newsletter

திருப்பூரில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 27ஆம் தேதி 59.22 அடியாக உயர்ந்துள்ளது. நீர் பிடிப்பு பகுதிகளில...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

ஆனைமலை, பொள்ளாச்சி, வால்பாறை பகுதிகளில் உள்ள அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்துள்ளது. ஆழியாறு அணையி...

கோவையில் போட்டித் தேர்வு பயிற்சி வகுப்புகளுக்கு ஆசிரியர்கள் தேவை

கோவை மாவட்ட வேலைவாய்ப்பு மையத்தில் TNPSC, SSC, RRB, IBPS போன்ற போட்டித் தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட...

கோவை ஜி.டி. பாலம் கீழ் புதிய பேருந்து நிழற்குடைகள் அமைப்பது குறித்து மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோவை அவினாசி சாலையில் அமைந்துள்ள ஜி.டி. பாலத்தின் கீழ் நிழற்குடை இல்லாத பேருந்து நிறுத்தங்களில் புதிய நிழற்குடை அமைக்கும...

கோவையில் மாநகராட்சி இடத்தில் கோவில் கட்ட முயற்சி; தகராறில் ஈடுபட்ட இரு தரப்பினர் மீது வழக்கு

கோவை ஆர்.எஸ்.புரம் காமராஜபுரம் ஹவுசிங் யூனிட் பகுதியில் மாநகராட்சிக்கு சொந்தமான பொது இடத்தில் அனுமதியின்றி கோவில் கட்ட ம...

சாலை விபத்துகள் : கோவையில் கணவன்-மனைவி, முதியவர் உட்பட 8 பேர் படுகாயம்

கோவை மாநகரின் பல்வேறு பகுதிகளில் அடுத்தடுத்து நடைபெற்ற 6 சாலை விபத்துகளில் முதியவர் உட்பட 8 பேர் காயமடைந்தனர். பைக் மீது...