கோவை பாலத்துறை அருகே மின்கம்பம் மீது பைக் மோதல் - கல்லூரி மாணவர்கள் இருவர் பலியான சோகம்!

கோவை ஒத்தக்கால்மண்டபம் பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் படித்து வந்த கிருஷ்ணகிரியை சேர்ந்த ஆதித்யா (18), முகேஷ்வரன் (19) ஆகியோர் நண்பர்களோடு இருசக்கர வாகனத்தில் சென்றபோது பாலத்துறை அருகே மின்கம்பம் மீது பைக் மோதியதில் இருவரும் மருத்துவமனை செல்லும் வழியில் பரிதாபமாக உயிரிழந்தனர்.


கோவை: பாலத்துறை அருகே மின்கம்பம் மீது பைக் மோதி கல்லூரி மாணவர்கள் இருவர் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டம் அக்ரகாரம் சிவாஜி நகரை சேர்ந்த காந்தி என்பவரது மகன் ஆதித்யா (18), இதேபோல், அவதானப்பட்டியை சேர்ந்த மாணிக்கம் என்பவரது மகன் முகேஷ்வரன் (19 ). இருவரும் கோவை ஒத்தக்கால்மண்டபம், பிரீமியர் மில்ஸ் பகுதியில் அறை எடுத்து தங்கி ஈச்சனாரி பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்தனர்.

இந்நிலையில் நேற்று ஆதித்யா மற்றும் முகேஸ்வரன் ஆகிய இருவரும் அவர்கள் நண்பர்களோடு பைக்கில் எல்.அன்.டி நெடுஞ்சாலையிலிருந்து பாலத்துறை நோக்கி சென்றனர். அப்போது ஆதித்யா பைக்கை ஓட்டியுள்ளார்.

இந்நிலையில், பாலத்துறை அருகே உள்ள தனியார் தொழிற்சாலை அருகே வந்தபோது கட்டுப்பாட்டை இழந்த பைக் சாலையோரத்திலிருந்த மின் கம்பம் மீது மோதியது.

இதில் இருவரும் தூக்கி வீசப்பட்ட நிலையில், படுகாயமடைந்த இருவரையும் அவர்களது நண்பர்கள் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு இருவரையும் பரிசோதனை செய்த மருத்துவர்கள் இருவரும் மருத்துவமனைக்கு வரும் வழியிலேயே உயிரிழந்து விட்டதாக தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், இந்த சம்பவம் தொடர்பாக மதுக்கரை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...