சூலூர் அருகே பேராசிரியர் வீட்டில் 15 சவரன் நகைகள் மற்றும் ரூ.77,000 பணம் கொள்ளை - போலீசார் விசாரணை!

கோவை சூலூர் அருகே கரையாம்பாளையத்தை சேர்ந்த தனியார் கல்லூரி பேராசிரியர் சரவணகுமார் (43). என்பவரது வீட்டின் பூட்டை உடைத்து, பீரோவிலிருந்த 15 சவரன் நகைகள் மற்றும் ரூ.77,000 பணம் ஆகியவற்றை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.


கோவை: சூலூர் அருகே தனியார் கல்லூரி பேராசிரியர் வீட்டில் மர்மநபர்கள் கொள்ளையடித்து சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சூலூர் அடுத்த கரையாம்பாளையத்தைச் சேர்ந்தவர் சரவணகுமார் (43). இவர் தனியார் கல்லூரியில் பேராசிரியராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில், நேற்று காலை இவர் தனது வீட்டை பூட்டி விட்டு குடும்பத்துடன் நீலகிரி மாவட்டம் குன்னூரில் உள்ள தனது தோட்டத்துக்கு சென்றுள்ளார்.

அப்போது இவரது வீட்டின் முன் பக்க கதவை உடைத்து உள்ளே நுழைந்த மர்மநபர்கள், அறையில் இருந்த பீரோவை திறந்து அதிலிருந்த செயின், வளையல், மோதிரம் உள்பட 15 சவரன் தங்க நகைகள் மற்றும் ரூ.77,500 ரொக்க பணம் ஆகியவற்றை கொள்ளையடித்து கொண்டு தப்பிச் சென்றனர்.

இதனிடையே இரவு வீட்டிற்கு திரும்பிய சரவணகுமார் கதவு உடைக்கப்பட்டு திறந்து இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். பின்னர் உள்ளே சென்று பார்த்த போது பீரோவிலிருந்த நகை மற்றும் பணம் கொள்ளை அடிக்கப்பட்டிருப்பது தெரியவந்தது.

இதனையடுத்து கொள்ளை சம்பவம் குறித்து சூலூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில், உடனடியாக சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற போலீசார் திவிர விசாரணை மேற்கொண்டனர்.

மேலும் சம்பவ இடத்துக்கு கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு, அந்த வீட்டில் பதிவாகி இருந்த மர்ம நபர்களின் கைரேகைகளையும் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...