வடவள்ளியில் புதிய உத்தேச பேருந்து திருப்புமுனையம் அமைக்க கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட கட்டிடம் மற்றும் கழிப்பிடம் அகற்றம்

கோவை மாநகராட்சி ஆணையர் மற்றும் தனி அலுவலர் க.விஜயகார்த்திகேயன் உத்தரவின் பேரில் மேற்கு மண்டலம், வடவள்ளியில் புதிய உத்தேச பேருந்து திருப்புமுனையம் அமைப்பதற்காக நுழைவாயிற் பகுதியில் உள்ள மாநகராட்சிக்கு சொந்தமான 8 கடைகள் கொண்ட பழைய வணிக வளாக கட்டிடம் மற்றும் பழைய கழிப்பிடங்கள் இன்று (1.03.2017) அகற்றப்பட்டு வழித்தடம் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

இதுகுறித்து மாநகராட்சி ஆணையர் மற்றும் தனி அலுவலர் தெரிவிக்கையில், "கோவை மாநகராட்சி மேற்கு மண்டலம், வடவள்ளியில் பேருந்துகள் நிறுத்துமிடம் உள்ளது. பேருந்துகள் நிறுத்துவதற்கு போதுமான இடவசதி இல்லாததால், உத்தேச பேருந்து திருப்புமுனையம் போதுமான வகையில் பேருந்துகள் இடையூரின்றி நுழையும் வசதி மற்றும் வெளியேறும் வசதி ஏற்படுத்தும் வகையில் புதிய உத்தேச பேருந்து திருப்புமுனையம் அமைப்பதற்கான பணிகள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

இதனைத்தொடர்ந்து, புதிய உத்தேச பேருந்து திருப்புமுனையம் அமையும் நுழைவாயிற் பகுதியில் அமைந்துள்ள ஆக்கிரமிப்புகள் சர்வே செய்து அப்புறப்படுத்தவும், பேருந்துகள் நுழைவுப் பகுதியிலுள்ள மிகப்பழமையான கழிப்பிடங்களையும் மற்றும் மாநகராட்சிக்கு சொந்தமான சிறு கடைகளையும் அகற்றி மாற்று ஏற்பாடு செய்தும், பேருந்து நிலையம் உள்பகுதியில் நுழைய இடவசதி ஏற்படுத்தும்படியும் திட்டமிட்டு, வடவள்ளியில் புதிய உத்தேச பேருந்து திருப்புமுனையம் அமைப்பதற்கான பணிகள் வரைவில் மேற்கொள்ளப்படும் என கடந்த சில நாட்களுக்கு முன்பு அறிவித்திருந்தோம். 



அதனைத் தொடர்ந்து முதற்கட்டமாக கடந்த 20.01.2017 அன்று மேற்கு மண்டல உதவி ஆணையர் கே.ராமைய்யா, உதவி நகரமைப்பு அலுவலர் ரவிச்சந்திரன் ஆகியோர் முன்னிலையில் வடவள்ளியில் புதிய உத்தேச பேருந்து திருப்புமுனையம் அமைப்பதற்காக நுழைவாயிற் பகுதியில் உள்ள தனியார் ஆக்கிரமிப்புக் கடைகள் மற்றும் தனியார் அலுவலகங்கள் காவல்துறை உதவியுடன் மாநகராட்சிப் பணியாளர்களைக் கொண்டு அகற்றப்பட்டு, புதிய உத்தேச பேருந்து திருப்புமுனையம் அமைப்பதற்காக பணிகள் மேற்கொள்ளப்பட்டது.

தற்பொழுது அதன் தொடர்ச்சியாக இன்று (மார்ச் 1) வடவள்ளியில் உள்ள மாநகராட்சிக்கு சொந்தமான 8 கடைகள் கொண்ட பழைய வணிக வளாக கட்டிடம் மற்றும் பழைய கழிப்பிடங்கள் காவல்துறை உதவியுடன் மாநகராட்சிப் பணியாளர்களைக் கொண்டு பொக்லைன் இயந்திரங்கள் மூலம் அகற்றப்பட்டு, பேருந்து திருப்புமுனையம் அமைப்பதற்கு நுழைவாயிற் பகுதியாக வழித்தடம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. 

இதனால் திருப்புமுனையத்திற்கு வருகின்ற பொது மக்கள் இடையூறு இல்லாமல் பேருந்துகள் மற்றும் வாகனங்களில் வந்து செல்வதற்கும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதனால் இடையர்பாளையம் சாலை மற்றும் மருதமலை சாலை சந்திப்பு பகுதி விஸ்தரிக்கப்பட்டு, சாலை அகலப்படுத்தியும் புதிய உத்தேச பேருந்து திருப்புமுனையம் அமைப்பதற்கான ஆயத்தப்பணிகள் மேற்கொள்ளபட்டுள்ளது" என மாநகராட்சி ஆணையர் மற்றும் தனி அலுவலர் தெரிவித்தார்.

Newsletter

கோவையில் விஸ்வ ஹிந்து பரிஷத் அமைப்பின் கிருஷ்ண ஜெயந்தி விழா; ராதை, கிருஷ்ணர் வேடமிட்டு குழந்தைகள் ஊர்வலம்

கோவை விஸ்வ ஹிந்து பரிஷத் சார்பில் 14-ஆம் ஆண்டு கிருஷ்ண ஜெயந்தி விழா விமரிசையாக நடைபெற்றது. சாஸ்திரி ரோட்டில் இருந்து சிவ...

Palakkad–Tiruchchirappalli Express to Be Short-Terminated at Pugalur on Four Days

The Palakkad Town–Tiruchchirappalli Express will be short-terminated at Pugalur on September 5, 8, 10 and 12 due to slee...

“விஜய் பிரதமர் வேட்பாளரா? – என்னை சிக்கலில் விட்டுவிடாதீர்கள்”: கோவையில் செங்கோட்டையன் பதில்

கோவை விமான நிலையத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் செங்கோட்டையன், தமிழகத்தில் பல்வேறு துறைகளுக்கான அறிவிப்புக...

Coimbatore–Nagercoil Express to Run on Diverted Route via Podanur, Poallchi

The Coimbatore–Nagercoil Express will operate on a diverted route on September 5, 8, 10 and 12 due to sleeper renewal an...

கோவையில் 15 அடி உயரத்தில் இருந்து தொழிலாளி தவறி விழுந்து காயம்; பாதுகாப்பு வசதிகள் குறித்து புகார்

கோவை சுந்தராபுரம் பகுதியில் உள்ள தனியார் தொழிற்சாலையில் சுமார் 15 அடி உயரத்தில் இருந்து தவறி விழுந்து பலத்த காயமடைந்த தொ...

Elderly Woman Killed in Truck Collision near Velandipalayam in Coimbatore

A 70-year-old woman was killed after the scooter she was travelling on with her daughter was hit by a heavy truck on Tha...