மாநகராட்சி இடத்தில் உள்ள சீமை கருவேள மரங்களை அகற்ற மாநகராட்சி ஆணையர் மற்றும் தனி அலுவலர் உத்தரவு


கோவை மாநகராட்சி மேற்கு மண்டலம், 19-வது வார்டுக்குட்பட்ட வீரகேரளம் பெரிய தோட்டம் காலனி மனைப்பிரிவு பகுதியில் மாநகராட்சிக்கு சொந்தமான பொது ஒதுக்கீடு இடத்தை மாநகராட்சி ஆணையர் மற்றும் தனி அலுவலர் க.விஜயகார்த்திகேயன் இன்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது அந்த இடத்தில் உள்ள சீமைக் கருவேள மரங்களை அகற்றி அறிவிப்பு பெயர் பலகை வைக்க சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு க.விஜயகார்த்திகேயன் உத்தரவிட்டார்.



இதனைத்தொடர்ந்து, அதேப் பகுதியில் வீடு வீடாகச் செல்லும் மாநகராட்சி கொசு ஒழிப்பு பணியாளர்களின் பதிவேடு புத்தகங்களை ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையர் மற்றும் தனி அலுவலர், தொடர்ந்து மாநகராட்சி துப்புரவு பணியாளர்கள் மக்கும் மற்றும் மக்காத குப்பைகளை பிரித்தெடுக்கும் பணிகளில் ஈடுபட்டு வருவதை பார்வையிட்டார்.



பின், வீரகேரளம் பகுதியில் உள்ள மாநகராட்சிப் பூங்காவை நேரில் சென்று மாநகராட்சி ஆணையர் மற்றும் தனி அலுவலர் பார்வையிட்டார். தொடர்ந்து, வீரகேரளம் ஹவுசிங்யூனிட் பகுதியில் உள்ள குடிநீர் நீத்தேக்கத் தொட்டியைச் சுற்றி ரூ.30 லட்சம் மதிப்பீட்டில் தடுப்புச் சுவர் அமைக்கும் பணிகளை ஆய்வு செய்தார்.



இதைத்தொடர்ந்து, வடவள்ளி 17-வது வார்டுக்குட்பட்ட குருசாமி நகர் பகுதியில் ரூ.74 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள மாநகராட்சி பூங்காவை மாநகராட்சி ஆணையர் மற்றும் தனி அலுவலர் க.விஜயகார்த்திகேயன் பார்வையிட்டார்.

இந்நிகழ்வுகளின் போது மாநகராட்சி ஆணையர் மற்றும் தனி அலுவலருடன், மாநகராட்சி துணை ஆணையர் ப.காந்திமதி, உதவி ஆணையர் கே.ராமைய்யா, செயற்பொறியாளர் (பொ) சரவணக்குமார், உதவி நகரமைப்பு அலுவலர் ரவிச்சந்திரன், உதவி செயற்பொறியாளர் கருப்புசாமி மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் உடனிருந்தனர்.



Newsletter

கோவையில் விஸ்வ ஹிந்து பரிஷத் அமைப்பின் கிருஷ்ண ஜெயந்தி விழா; ராதை, கிருஷ்ணர் வேடமிட்டு குழந்தைகள் ஊர்வலம்

கோவை விஸ்வ ஹிந்து பரிஷத் சார்பில் 14-ஆம் ஆண்டு கிருஷ்ண ஜெயந்தி விழா விமரிசையாக நடைபெற்றது. சாஸ்திரி ரோட்டில் இருந்து சிவ...

Palakkad–Tiruchchirappalli Express to Be Short-Terminated at Pugalur on Four Days

The Palakkad Town–Tiruchchirappalli Express will be short-terminated at Pugalur on September 5, 8, 10 and 12 due to slee...

“விஜய் பிரதமர் வேட்பாளரா? – என்னை சிக்கலில் விட்டுவிடாதீர்கள்”: கோவையில் செங்கோட்டையன் பதில்

கோவை விமான நிலையத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் செங்கோட்டையன், தமிழகத்தில் பல்வேறு துறைகளுக்கான அறிவிப்புக...

Coimbatore–Nagercoil Express to Run on Diverted Route via Podanur, Poallchi

The Coimbatore–Nagercoil Express will operate on a diverted route on September 5, 8, 10 and 12 due to sleeper renewal an...

கோவையில் 15 அடி உயரத்தில் இருந்து தொழிலாளி தவறி விழுந்து காயம்; பாதுகாப்பு வசதிகள் குறித்து புகார்

கோவை சுந்தராபுரம் பகுதியில் உள்ள தனியார் தொழிற்சாலையில் சுமார் 15 அடி உயரத்தில் இருந்து தவறி விழுந்து பலத்த காயமடைந்த தொ...

Elderly Woman Killed in Truck Collision near Velandipalayam in Coimbatore

A 70-year-old woman was killed after the scooter she was travelling on with her daughter was hit by a heavy truck on Tha...