கோவை லங்கா கார்னர் சுரங்கப்பாதையில் வெள்ளநீர் வெளியேற்றம்

கோவையில் பெய்த கனமழையால் லங்கா கார்னர் பகுதி சுரங்கப்பாதையில் தேங்கிய வெள்ளநீர் வெளியேற்றப்படுவதை மாநகராட்சி ஆணையர் மு.பிரதாப் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.


கோவை: கோவையில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து பரவலாக நல்ல மழை பெய்துவருகிறது. அந்த வகையில், நேற்று பெய்த கனமழையால், லங்கா கார்னர்‌ பகுதியில் உள்ள சுரங்கப்பாதையில்‌ வெள்ளநீர் தேங்கியது.

இதனை, வெளியேற்றும் பணி நடைபெற்று வருகிறது. இந்தப் பணிகளை கோயம்புத்தூர்‌ மாநகராட்சி ஆணையர் பிரதாப்‌ நேரில்‌ சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்‌. அப்போது, உதவி ஆணையர்‌ மகேஷ்கனகராஜ்‌, உதவி பொறியாளர்‌ விமல்ராஜ்‌, சுகாதார அலுவலர்‌ குணசேகரன்‌, சுகாதார ஆய்வாளர்‌ தனபால்‌ ஆகியோர்‌ உடனிருந்தனர்.

இதேபோல், கோயம்புத்தூர்‌ மாநகராட்சி வடக்கு மண்டலம்‌ வார்டு எண்‌.19க்குட்பட்ட எம்‌.கே.பி. காலனி பகுதியில்‌ நேற்று இரவு பெய்த கன மழையில்‌ மரம்‌ ஒன்று பெயர்ந்து விழுந்தது.



இதனை, கோவை மாநகராட்சி மேயர்‌ கல்பனா ஆனந்தகுமார்‌ நேரில்‌ சென்று பார்வையிட்டு ஆய்வு செய்து, விழுந்த மரத்தை உடனடியாக அகற்ற சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்‌. அப்போது மாநகராட்சி அலுவலர்கள்‌ உடனிருந்தனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...