கோவையில் நடந்து சென்ற பெண்ணிடம் சங்கிலி பறிப்பு - பரபரப்பான சிசிடிவி காட்சி வெளியீடு!

கோவையில் சாலையில் நடந்துசென்ற பெண்ணிடம் தாலி செயினை மர்ம நபர்கள் பறித்துச் சென்றனர். இது தொடர்பாக சிசிடிவி காட்சிகளைக் கொண்டு, குற்றவாளிகளை போலீசார் தேடிவருகின்றனர். ஆட்கள் நடமாட்டம் உள்ள பகுதியில் இந்த செயின் பறிப்பு சம்பவம் நடந்தது, அப்பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.


கோவை: கோவை இராமநாதபுரம், ராமசாமி நகர் பகுதியை சேர்ந்தவர் சரோஜவிபி.

அவர் அதே பகுதியில் உள்ள கடைக்கு நடந்து சென்றுவிட்டு, மீண்டும் தனது வீட்டிற்கு திரும்பிக்கொண்டு இருந்தார்.

அப்போது, பின்னால் வந்த இரண்டு நபர்கள் திடீரென சரோஜாவிபி கழுத்தில் இருந்த 3 சவரன் தங்க சங்கிலியை பறிக்க முயன்றனர்.

சுதாரித்துகொண்ட சரோஜாவிபி, தனது தங்க சங்கிலியை இருக்கமாக பிடித்துக்கொண்டு கூச்சலிட்ட நிலையில், சங்கிலி அறுந்து பாதி கொள்ளையர்களின் கையில் கிடைத்ததால் அங்கிருந்து கொள்ளையர்கள் மின்னல் வேகத்தில் தப்பிச்சென்றனர்.

இதனால் செய்வதவறியாது தவித்த சரோஜாவிபி, தனது கையில் இருந்த பாதி தங்க சங்கிலியுடன் கோவை இராமநாதபுரம் காவல் நிலையத்தில் புகாரளித்தார்.

அதன் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் சம்பவ இடத்தில் விசாரணை மேற்கொண்டதோடு, அந்த இடத்தில் பதிவான கண்காணிப்பு கேமரா காட்சிகளை வைத்து சங்கிலி பறிப்பு கொள்ளையர்களை தேடிவருகின்றனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...