கோவை ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்ப்பு நாள் கூட்டம் - போலீசார் தீவிர சோதனை!

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திங்கட்கிழமை தோறும் நடைபெறும் மக்கள் குறை தீர்ப்பு கூட்டம் இன்று நடைபெறுகிறது. அதிகப்படியான மக்கள் கூட்டம் காணப்படும் என்பதால் போலீசார் அசம்பாவிதங்களை தடுக்கும் பொருட்டு தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.


கோவை: கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்களை குறைதீர்ப்பு நாள் கூட்டத்தை முன்னிட்டு போலீசார் தீவிர சோதனைக்கு பிறகே பொதுமக்களை அனுமதித்தனர்.

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வழக்கமாக திங்கட்கிழமைகளில் நடைபெறும் மக்கள் குறை தீர்ப்பு கூட்டம் இன்று நடைபெறுகிறது. இதில் பல்வேறு மக்கள் அவர்களது கோரிக்கை மனுக்களை மாவட்ட ஆட்சியரிடம் நேரடியாக வழங்குவர். கோரிக்கை மனுக்களை அளிக்க வரும் பொது மக்களில் சிலர், அல்லது அரசியல் கட்சிகள் அமைப்புகளில் சேர்ந்த சிலர் அவர்களது கோரிக்கைகளை வலியுறுத்தி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு போராட்டங்களையும் முன்னெடுப்பர்.

எனவே மக்கள் குறை தீர்ப்பு நாளன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அதிகப்படியான மக்கள் கூட்டம் காணப்படும். இதனால் போலீசாரும் அசம்பாவிதங்களை தடுக்கும் பொருட்டு பொதுமக்களின் உடமைகளை சோதனை செய்த பின்னரே மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்குள் பொதுமக்களை அனுமதிப்பர்.

சமீப காலங்களாக மக்கள் குறை தீர்ப்பு கூட்டத்திற்கு வரும் பொது மக்களில் சிலர் திடீரென மண்ணெண்ணெய், பெட்ரோல் உள்ளிட்டவற்றை ஊற்றிக் கொண்டு தீக்குளித்து தற்கொலை முயற்சிக்கு முயல்கின்றனர். இவ்வாறான செயல்களில் ஈடுபடும் பலரும் தண்ணீர் பாட்டில்களில் நீரைக் கொண்டு வருவது போல் மண்ணெண்ணெய் பெட்ரோல் உள்ளிட்டவற்றை எடுத்து வந்து இதுபோன்று சம்பவங்களில் ஈடுபடுகின்றனர்.

எனவே ஒவ்வொரு முறையும் பாதுகாப்பு பணியில் இருக்கும் காவலர்கள் மிகுந்த முன்னெச்சரிக்கை பாதுகாப்பு நடவடிக்கைகளுடன் தயார் நிலையில் இருந்து வருகின்றனர்.



அதன்படி இன்றைய தினம் நடைபெறும் மக்கள் குறை தீர்ப்பு முகாம்களிலும் பொதுமக்கள் தீக்குளிப்பு போன்ற அசம்பாவித செயல்களில் ஈடுபடாமல் இருப்பதை உறுதி செய்யும் பொருட்டு உடமைகள் அனைத்தும் தீவிர சோதனைக்கு உட்படுத்தப்பட்ட பிறகே மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்குள் அனுமதி வழங்கப்படுகிறது.

மேலும் பொதுமக்கள் எடுத்து வரும் தண்ணீர் பாட்டில்களும் சோதனை செய்யப்படுகிறது. தண்ணீர் பாட்டிலில் இருப்பதை குடித்து பார்த்த பின்னரே காவல் துறையினர் பொதுமக்களை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்குள் அனுமதி வழங்குகின்றனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...