கோவையில் டிக்கெட் கேட்ட தனியார் பேருந்து நடத்துனரின் விரலை கடித்த நபர் கைது - பரபரப்பு!

கோவை - பொள்ளாச்சி இடையே செல்லும் தனியார் பேருந்தில் நடத்துனராக பணியாற்றி வரும், உடுமலையைச் சேர்ந்தவர் கிருஷ்ணகுமார் (47) நேற்று பணியிலிருந்த போது, பேருந்தில் ஏறிய பிரின்ஸ் என்பவரிடம் டிக்கெட் கேட்டபோது, மதுபோதையில் இருந்த அவர், கிருஷ்ணகுமார் விரலை கடித்த நிலையில், அதை தடுக்க முயன்ற மற்றொரு பயணியின் விரலையும் கடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.


கோவை: கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே தனியார் பேருந்தில் டிக்கெட் கேட்ட நடத்துனர் விரலை பயணி ஒருவர் கடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டையை சேர்ந்தவர் கிருஷ்ணகுமார் (47). இவர் கோவை - பொள்ளாச்சி செல்லும் தனியார் பேருந்தில் நடத்துனராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் நேற்று வழக்கம் போல் கோவையில் இருந்து பொள்ளாச்சிக்கு சென்ற பேருந்தில் கிணத்துக்கடவு வடபுதூர் பகுதியைச் சேர்ந்த பிரின்ஸ் (42), என்பவர் பயணம் செய்துள்ளார்.

சுந்தராபுரம் பொங்காளியம்மன் கோவில் அருகே பேருந்து வந்த போது கிருஷ்ணகுமார் பிரின்ஸிடம் டிக்கெட் எடுக்க அறிவுறுத்தியுள்ளார். அப்போது மது போதையில் இருந்த பிரின்ஸ் நடத்துனர் கிருஷ்ணகுமாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். பின்னர் திடீரென கிருஷ்ணகுமாரின் கைவிரல்களை கடித்ததோடு, தாக்கியுள்ளார்.

அப்போது நடத்துனரை காப்பாற்ற வந்த கிருஷ்ணசாமி என்பவரது கையையும் பிரின்ஸ் கடித்துள்ளார். அங்கிருந்த சக பயணிகள் அவரை மடக்கி பிடித்தனர். இதையடுத்து கிருஷ்ணகுமார் போத்தனூர் போலீசாருக்கு தகவல் அளித்தார். விரைந்து வந்த போலீசார் பிரின்ஸிடம் விசாரணை மேற்கொண்டு, மூன்று பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தனர்.

இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...