கோவையில் தனியார் நிறுவன இயக்குநர் வீட்டில் தங்க கட்டி திருட்டு - பெண் கைது!

கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியில், மயில் மார்க் சம்பா ரவை நிறுவன இயக்குனர் பொன் முருகன்(46) என்பவரது வீட்டில் இருந்த 150 கிராம் எடையுள்ள தங்க கட்டிகளை திருடிச் சென்ற பணிப்பெண் ஜோதி என்பவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.


கோவை: கோவையில் தங்க கட்டிகளை திருடிய பெண்ணை போலீசார் கைது செய்தனர்.

கோவை மாவட்டம் ஆர்.எஸ்.புரம் அடுத்த சிரியன் சர்ச் சாலை பகுதியை சேர்ந்தவர் பொன் முருகன் (46).

இவர் பிரபல மயில் மார்க் சம்பா ரவை நிறுவனத்தில் இயக்குனராக உள்ளார். இவரது வீட்டில் வைத்திருந்த சுமார் 150 கிராம் தங்க பிஸ்கட், கடந்த சில நாட்களுக்கு முன்பு மாயமாகியுள்ளது.

இதையடுத்து பொன்முருகன் தனது வீட்டில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்தார்.

அப்போது அவரது வீட்டு வேலைக்கு இருந்த ஒண்டிப்புதூர் காமாட்சிபுரம் பகுதியைச் சேர்ந்த ஜோதி (47) என்பவர் தங்கக் கட்டியை எடுத்துச் சென்றது தெரியவந்தது.

இதையடுத்து பொன்முருகன் ஆர்.எஸ் புரம் காவல்நிலையத்தில் புகார் அளித்தார்.

புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார் ஜோதியை கைது செய்து அவரிடமிருந்து தங்க கட்டிகளை பறிமுதல் செய்தனர்.

மேலும் ஜோதியை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...