திருப்பூரில் காவல்துறைக்கு புதிய இருசக்கர ரோந்து வாகனங்கள் - மாவட்ட எஸ்.பி சசாங் சாய் துவங்கி வைத்தார்!

திருப்பூர் மாவட்ட காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபடுவதற்காக புதிதாக இருசக்கர வாகனங்கள் வழங்கும் நிகழ்வு மாவட்ட எஸ்.பி அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் எஸ்.பி சசாங் சாய் கலந்து கொண்டு இருசக்கர வாகனங்களை பயன்பாட்டுக்காக தொடங்கி வைத்தார்.


திருப்பூர்: திருப்பூரில் காவல்துறையினருக்கான புதிய இருசக்கர ரோந்து வாகனங்களை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சசாங் சாய் துவக்கி வைத்தார்.

தமிழகம் முழுவதும் குற்றச் சம்பவங்களை தடுக்கும் வகையில் காவல்துறையினருக்கு புதிய ரோந்து வாகனங்கள் வழங்கப்பட்டு வருகிறது. குறிப்பாக விரைவாக போக்குவரத்து நெரிசலில் சிக்கிக் கொள்ளாமல் செல்லும் வகையில் இருசக்கர ரோந்து வாகனங்கள் வழங்கப்பட்டு வருகிறது.



அதன் ஒரு பகுதியாக திருப்பூர் மாவட்டத்தின் ஊரகப் பகுதிகளான அவிநாசி, ஊத்துக்குளி, ஊதியூர் உள்ளிட்ட 12 காவல் நிலையங்களுக்கான புதிய இருசக்கர ரோந்து வாகனங்கள் வழங்கப்பட்டன.



திருப்பூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் நடைபெற்ற இந்த நிகழ்வில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சசாங் சாய் கொடியசைத்து துவக்கி வைத்தார்.



இந்த புதிய ரோந்து இருசக்கர வாகனங்களில் அதிக ஒளி எழுப்பக்கூடிய நவீன இயந்திரங்கள் மற்றும் ஸ்பீக்கர், மைக் உள்ளிட்டவை பொருத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...