கோவை பீளமேடு அருகே இளைஞரை கத்தியால் குத்திய வடமாநில முதியவர் கைது!

கோவை - அவிநாசி சாலையில் விமான நிலையம் அருகே கட்டுமான பணியில் ஈடுபட்டு வரும் ஒரிசாவை சேர்ந்த பிராவாட் மாலிக் (28) என்பவரை லாஜ்ரூஷ் டொப்போ (70) என்ற முதியவர் கத்தியால் குத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


கோவை: கோவை அருகே செல்போன் காணாமல் போனதால் ஏற்பட்ட வாக்குவாதத்தில் வடமாநில இளைஞரை முதியவர் கத்தியால் குத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஒரிசா மாநிலம் கொன்டரப்பரா பகுதியை சேர்ந்த மோகன் மாலிக் என்பவரது மகன் பிராவாட் மாலிக் (28). இவர் கோவை - அவிநாசி சாலையில் விமான நிலையம் அருகே கட்டப்பட்டு வரும் தனியார் கண் மருத்துவமனை கட்டட வேலைக்காக அதே பகுதியில் சக ஒடிசா தொழிலாளர்களுடன் தங்கி வேலை செய்து வருகிறார்.

இந்நிலையில் பிராவாட் மாலிக் அறையில் தங்கிருக்கும் லாஜ்ரூஷ் டொப்போ (70) என்பவரது செல்போன் மாயமானதாக கூறப்படுகிறது. இதுகுறித்து அறையில் இருந்த பிராவாட் மாலிக்கிடம் அவர் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். அப்போது ஆத்திரமடைந்த லாஜ்ரூஷ் டொப்போ அங்கிருந்த கத்தியை எடுத்து பிராவாட் மாலிக் வயிற்றில் குத்தியுள்ளார்.

இதில் ரத்த வெள்ளத்தில் சரிந்த அவரை சக தொழிலாளிகள் மீட்டு அருகேயுள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தகவலறிந்து வந்த பீளமேடு போலீசார் இளைஞரை கத்தியால் குத்திய லாஜ்ரூஷ் டொப்போவை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.

இச்சம்பவம் வடமாநில தொழிலாளர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...