கோவை மாவட்ட வனச்சரக பகுதிகளில் யானைகள் கணக்கெடுப்பும் பணி - வனச்சரகர்கள், வன ஆர்வலர்கள் பங்கேற்பு!

தமிழகம், கேரளா, கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட நான்கு மாநிலங்களில் உள்ள அனைத்து வனத்துறை பகுதிகளிலும் 2023 ஆம் ஆண்டிற்கான ஒருங்கிணைந்த யானைகள் கணக்கெடுக்கும் பணி நடைபெற்றது. இதில் வனச்சரகர்கள் மற்றும் வன ஆர்வலர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.



கோவை: கோவை மாவட்ட வனச்சரக பகுதிகளில் யானைகள் கணக்கெடுக்கும் பணி இன்று நடைபெற்றது.

2023 ஆம் ஆண்டிற்கான ஒருங்கிணைந்த யானைகள் கணக்கெடுக்கும் பணி தமிழகம், கேரளா, கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட நான்கு மாநிலங்களில் இன்று காலை 6:00 மணியிலிருந்து மாலை 6:00 மணி வரை அனைத்து வனத்துறை பகுதிகளிலும் நடைபெற்றது.

அந்த வகையில் கோவை மாவட்டத்தில் யானை கணக்கெடுக்கும் பணிகள் மதுக்கரை, கோவை, போளுவாம்பட்டி, மேட்டுப்பாளையம் சிறுமுகை, பெரியநாயக்கன்பாளையம் மற்றும் காரமடை உள்ளிட்ட 7 வனச்சரகங்களில் 42 பிளாக்குகளாக யானைகள் கணக்கெடுக்கும் பணிகள் நடைபெற்றது.

யானைகள் கணக்கெடுக்கும் பணியில் வனச்சரகர்கள், வனக்காப்பாளர்கள், வன அலுவலர்கள், வன ஆர்வலர்கள் மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் ஆகியவை ஒவ்வொரு குழுக்களாக பிரிக்கப்பட்டு ஒரு குழுவில் ஐந்திலிருந்து ஏழு நபர்கள் வரை இணைக்கப்பட்டுள்ளனர்.

யானைகள் கணக்கெடுக்கும் கையேடு ஒவ்வொரு குழுவுக்கும் வழங்கப்பட்டுள்ளது. 7 வனச்சரகங்கள் உள்ள கோவை மாவட்ட வனப்பகுதியில் 84 வனச்சரகர்கள், 88 வன ஆர்வலர்கள் மற்றும் வன அலுவலர்கள் இந்த கணக்கெடுக்கும் பணியில் ஈடுபட்டனர்.



வனப்பகுதிகளில் யானைகளின் நடமாட்டம் குறித்தும், யானைகள் எந்தெந்த பகுதிகளில் தங்களுடைய வாழ்விடத்தை அமைத்துக் கொண்டுள்ளது என்பது குறித்தும், யானைகள் செல்லக்கூடிய பாதைகளில் யானை சாணங்கள், யானை நீர் குடிக்கக்கூடிய நீர் நிலைகள் என அனைத்தும் கணக்கெடுக்கப்பட்டன.

தமிழக வனப்பகுதியில் இருந்து கேரளா மற்றும் கர்நாடக வனப்பகுதிக்கு சென்று வரக்கூடிய யானைகள் குறித்து துல்லியமாக கணக்கெடுக்கும் விதமாக பல்வேறு பாதுகாப்பு உபகரணங்களுடன் வனப்பகுதிக்குள் வனத்துறை காவலர்கள் சென்றனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...