கனிமவள கொள்ளை தொடர்பான அடுத்தக்கட்ட நகர்வு குறித்து ஒரு வாரத்தில் முடிவு - பாஜக தலைவர் அண்ணாமலை தகவல்!

கோவையில் நடைபெற்ற செயற்குழு கூட்டத்திற்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அண்ணாமலை, கோவையில் நடைபெறும் சட்டவிரோத கனிமவள கொள்ளை தொடர்பாக அடுத்தகட்ட நகர்வு குறித்து ஒரு வார காலத்திற்குள் முடிவு எடுக்கப்படும் என தெரிவித்தார். மேலும், திமுக ஆட்சியில் இதுவரை எத்தனை அரசு பணிகள் நிரப்பப்பட்டுள்ளது எனவும் கேள்வி எழுப்பினார்.



கோவை: கோவையில் நடைபெறும் சட்டவிரோத கனிமவள கொள்ளை தொடர்பாக அடுத்தகட்ட நகர்வு குறித்து ஒரு வார காலத்திற்குள் முடிவு எடுக்கப்படும் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

கோவையில் நடைபெற்ற பாஜக செயற்குழு கூட்டத்திற்கு பிறகு அண்ணாமலை செய்தியாளர்களிடம் பேசியதாவது,



கோவை மாவட்டத்தில் நடைபெறும் கனிமவள கொள்ளை தொடர்பாக கடந்த முறை போராட்டம் நடத்தி காலக்கெடு கொடுத்த பிறகு அரசு அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி கனிமவள கொள்ளை நிறுத்தப்பட்டது.

மீண்டும் வேதாளம் முருங்கை மரம் ஏறியது போன்று தற்போது கொள்ளை துவங்கி உள்ளது. மீண்டும் அரசு இயந்திரத்துடன் போராடுவதா என்ற கேள்வி இருக்கிறது. இதற்கான நிரந்தர தீர்வு வர வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறோம்.

2 மாவட்ட தலைவர்கள் மற்றும் நிர்வாகிகளுடன் இணைந்து பேச்சுவார்த்தை நடத்தி அதிகபட்சம் ஒரு வார காலத்திற்குள் இதற்கான ஒரு முடிவு எடுக்கப்படும். கடந்த முறை அரசு அதிகாரிகள் கொடுத்த உறுதியின் அடிப்படையில் போராட்டம் கைவிடப்பட்டது. ஆனால் அதிகாரிகள் பேசிய பேச்சுப்படி நடக்காததால் ஒரு வார காலத்திற்குள் போராட்டம் குறித்த முடிவு எடுக்கப்படும்.

கடந்த 2022 ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில் அடுத்த 500 நாட்களில் 10 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு உருவாக்கி தருவதாக பிரதமர் கூறிய நிலையில், தற்போது ஐந்து தவணைகளில் தலா 21,000 பேர் என்ற அடிப்படையில் அனைத்து இடங்களிலும் தெளிவாக லஞ்சம் இல்லாமல் ஆட்கள் தேர்வு செய்யப்படுகிறார்கள்.

அதே வேளையில் தமிழகத்தில் நடத்திய தேர்வுக்கே 2 ஆண்டுக்கு பிறகு முடிவுகள் வெளியாகிறது. ஒரு பக்கம் தேர்வு என்பது ஒரு பெயரளவிற்கு மட்டுமே நடத்தப்படுகிறது. அனைத்து இடங்களிலும் லஞ்ச லாவணியம் இருக்கிறது. திமுக அமைச்சராக இருக்க கூடிய செந்தில் பாலாஜி tnstc நடத்திய தேர்வுக்கு பணம் வாங்கி பதவி கொடுத்ததாகவும், அதற்கு பிறகு பணத்தை திருப்பி கொடுத்து விட்டேன் என கூறினார்.

இப்படிப்பட்ட அமைச்சர் அமைச்சரவையில் இருக்கும் பொழுது எப்படி அரசு இடங்களுக்கு நேர்மையான முறையில் தேர்வு நடத்தப்படும். மக்கள் ஒரு புறம் பார்த்துக் கொண்டு தான் இருக்கிறார்கள். நாங்களும் தோண்டத் தோண்ட குப்பையை போன்று இவர்கள் செய்யும் தவறுகளை சுட்டிக்காட்டிக் கொண்டிருக்கிறோம். இதை மக்கள் மன்றத்தில் வைக்கிறோம்.

இதேபோல் திமுக தேர்தல் அறிக்கையில் தாங்கள் ஆட்சிக்கு வந்தால் ஐந்து ஆண்டுகளில் அரசு பணிகளில் மட்டும் ஆண்டுக்கு 70 ஆயிரம் பணிகள் நிரப்புவதாக கூறியிருந்தனர். 10 லட்சம் வேலை வாய்ப்பு உருவாக்குவதாக கூறினர். அவர்கள் கூறியதைப் போன்று எத்தனை அரசு பணிகளை நிரப்பி உள்ளனர்.

பிரதமரின் வேலைவாய்ப்பு போன்ற ஒரு முடிவு எடுப்பதற்கு துணிவு வேண்டும். நல்ல எண்ணம் வேண்டும், தூய்மையான ஆட்சியை கொடுக்க வேண்டும் என்ற சங்கல்பம் வேண்டும் என்று இருக்கையில் மூன்றுமே திமுக விடம் இல்லாத பொழுது எப்படி ஆட்சி பணியை நேர்மையாக நிரப்ப முடியும்.

இவ்வாறு அவர் பேசினார்.

Newsletter

கோவையில் போட்டித் தேர்வு பயிற்சி வகுப்புகளுக்கு ஆசிரியர்கள் தேவை

கோவை மாவட்ட வேலைவாய்ப்பு மையத்தில் TNPSC, SSC, RRB, IBPS போன்ற போட்டித் தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட...

கோவை ஜி.டி. பாலம் கீழ் புதிய பேருந்து நிழற்குடைகள் அமைப்பது குறித்து மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோவை அவினாசி சாலையில் அமைந்துள்ள ஜி.டி. பாலத்தின் கீழ் நிழற்குடை இல்லாத பேருந்து நிறுத்தங்களில் புதிய நிழற்குடை அமைக்கும...

கோவையில் மாநகராட்சி இடத்தில் கோவில் கட்ட முயற்சி; தகராறில் ஈடுபட்ட இரு தரப்பினர் மீது வழக்கு

கோவை ஆர்.எஸ்.புரம் காமராஜபுரம் ஹவுசிங் யூனிட் பகுதியில் மாநகராட்சிக்கு சொந்தமான பொது இடத்தில் அனுமதியின்றி கோவில் கட்ட ம...

சாலை விபத்துகள் : கோவையில் கணவன்-மனைவி, முதியவர் உட்பட 8 பேர் படுகாயம்

கோவை மாநகரின் பல்வேறு பகுதிகளில் அடுத்தடுத்து நடைபெற்ற 6 சாலை விபத்துகளில் முதியவர் உட்பட 8 பேர் காயமடைந்தனர். பைக் மீது...

G Square விவகாரம் குறித்து எஸ்.பி. வேலுமணியே விளக்கம் அளிப்பார்: கோவையில் அமைச்சர் செங்கோட்டையன்

கோவையில் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் செங்கோட்டையன், G Square தொடர்பான கேள்விக்கு முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமண...

மிலாடி நபி பண்டிகையை முன்னிட்டு கோவையில் 20,000 பேருக்கு இலவச நெய் சோறு வழங்கல்

கோவை உக்கடம் ஜி.எம் நகரில் சுன்னத் ஜமாத் சார்பில் மிலாடி நபி பண்டிகையை முன்னிட்டு 2000 கிலோ அரிசியில் நெய் சோறு சமைக்கப்...