கோவையில் குழந்தையின் படுக்கையில் புகுந்த நல்ல பாம்பு - பெற்றோர் அச்சம்!

கோவை போத்தனூர் அருகே தாய் ஒருவர் குழந்தைக்கான படுக்கையில் (Baby Bed) தனது குழந்தையை படுக்க வைத்துவிட்டு அதனை இழுத்த போது, அதற்கு அடியில் பாம்பு இருந்தது தெரியவந்தது. இதனையடுத்து அங்கு வந்த பாம்பு பிடிவீரர் மோகன், நல்ல பாம்பை லாவகமாக பிடித்துச் சென்று வனப்பகுதியில் விட்டுள்ளார்.


கோவை: போத்தனூர் அருகே குழந்தைக்கான படுக்கையில் நல்ல பாம்பு புகுந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

போத்தனூர் அருகே தாய் ஒருவர் குழந்தைக்கான படுக்கையில் (Baby Bed) தனது குழந்தையை படுக்க வைத்துள்ளார். இதனையடுத்து, அந்த படுக்கையை இடம் மாற்றுவதற்காக அதனை இழுத்துள்ளார்.

அப்போது, அந்த படுக்கைக்கு அடியில் நல்ல பாம்பு ஒன்று இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார். இதனையடுத்து சுதாரித்துக் கொண்ட தாய் குழந்தையை உடனடியாக தூக்கி கொண்டு அறையை விட்டு வெளியில் கொண்டு வந்துள்ளார்.

தொடர்ந்து வன உயிர் மற்றும் இயற்கை பாதுகாப்பு அறக்கட்டளையை சேர்ந்த பாம்பு பிடி வீரர் மோகனுக்கு குடும்பத்தினர் தகவல் தெரிவித்துள்ளனர்.

சம்பவ இடத்துக்கு வந்த பாம்பு பிடி வீரர் மோகன், குழந்தையின் படுக்கைக்கு அடியில் இருந்த நல்ல பாம்பை லாவமாக பிடித்து பிளாஸ்டிக் குடுவைக்குள் அடைத்தார். பின்னர் அந்த நல்ல பாம்பை வனப்பகுதிக்கு கொண்டு சென்று விடுவித்தார்.

குழந்தையின் படுக்கையில் இருந்த பாம்பு அதிர்ஷ்டவசமாக குழந்தையை எதுவும் செய்யாமல் இருந்ததாக பெற்றோர்கள் மகிழ்ச்சியுடன் தெரிவித்தனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...