மேட்டுப்பாளையம் பேருந்து நிலையத்தில் பெண்ணின் பர்சை திருட முயற்சி - கேரளா பெண்கள் கைது…!

மேட்டுப்பாளையம் சிறுமுகை சாலை சங்கர் நகரை சேர்ந்தவர் ரங்கநாதன். இவர் நேற்று மேட்டுப்பாளையம் பேருந்து நிலையத்தில் தனது மனைவியுடன் நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த 22 வயது இளம்பெண் ஒருவர் ரங்கநாதன் மனைவி கையிலிருந்த பர்சை திருடி தப்ப முயன்றபோது பொதுமக்கள் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்.


கோவை: கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் பெண்ணிடம் பர்சை திருட முயன்ற இளம்பெண்ணை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

மேட்டுப்பாளையம் அடுத்த சிறுமுகை சாலை சங்கர் நகரைச் சேர்ந்தவர் ரங்கநாதன். இவர் நேற்று மேட்டுப்பாளையம் பேருந்து நிலையத்தில் தனது மனைவியுடன் நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த 22 வயது இளம்பெண் ஒருவர், திடீரென ரங்கநாதன் மனைவி கையில் வைத்திருந்த பர்சை திருடிவிட்டு, அதை அருகே இருந்த மற்றொரு 25 வயது பெண்ணிடம் கொடுத்துவிட்டு இருவரும் தப்ப முயன்றனர்.

அப்போது அவர்கள் கூச்சலிடவே அங்கிருந்த பொதுமக்கள் தப்ப முயன்ற இரண்டு பெண்களையும் மடக்கிப் பிடித்தனர். பின்னர் மேட்டுப்பாளையம் போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

விசாரணையில் பிடிபட்ட இருவரும் கேரள மாநிலம் பாலக்காட்டை சேர்ந்தவர்கள் என்பதும், கோவையில் பொம்மை விற்பனை செய்து கொண்டு இருந்ததும் தெரியவந்தது.

இதையடுத்து இருவரையும் கைது செய்த போலீசார் அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...