பொள்ளாச்சி அருகே கஞ்சா விற்பனையில் ஈடுபட்டவர் கைது - 2.80 கிலோ கஞ்சா பறிமுதல்!

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அடுத்த ஆனைமலை பகுதியில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வந்த ஹக்கீம் (39) என்பவரை கைது செய்த போலீசார், அவரிடம் இருந்த 2.80 கிலோ கஞ்சாவையும் பறிமுதல் செய்தனர். தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில், ஆந்திராவில் இருந்து ரயில் மூலம் கஞ்சாவை வாங்கி வந்து விற்பனையில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது.



கோவை: பொள்ளாச்சி அடுத்த ஆனைமலை அருகே கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட நபரை போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர். 

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அடுத்த ஆனைமலை பகுதியில் கஞ்சா விற்பனை நடப்பதாக ஆனைமலை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இந்த தகவலின் அடிப்படையில் ஆனைமலை போலீசார் அப்பகுதியில் கண்காணிப்பு பணியை மேற்கொண்டு வந்தனர்.

இந்நிலையில், ஆனைமலை ஆற்றுப்பாலம் அருகே கஞ்சாவுடன் வலம் வந்த ஹக்கீம் (39) என்பவரை போலீசார் மடக்கி பிடித்து கைது செய்த போலீசார் அவரிடமிருந்த 2.80 கிலோ கஞ்சா, செல்போன் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். 

இதையடுத்து அவரிடம் மேற்கொண்ட விசாரணையில் பொள்ளாச்சியை சேர்ந்த ஹக்கீம் ஆந்திராவில் இருந்து ரயில் மூலம் கஞ்சாவை வாங்கி வந்து அதனை ஆனைமலை பகுதியில் விற்பனை செய்து வந்தது தெரியவந்தது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...