அவிநாசி அரசு மருத்துவமனை, வட்டாட்சியர் அலுவலகங்களில் ஆட்சியர் திடீர் ஆய்வு!

திருப்பூர் மாவட்டம் அவிநாசியில் திடீர் ஆய்வு மேற்கொண்ட ஆட்சியர் கிறிஸ்துராஜ், அவிநாசி தாலுகாவிற்கு உட்பட்ட வட்டாட்சியர் அலுவலகம், அரசு மருத்துவமனை, நாதம்பாளையம் ரேஷன் கடை, முதலிபாளையம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்து அதிகாரிகளுக்கு அறிவுரைகளை வழங்கினார்.



திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் அவிநாசியில் உள்ள அரசு மருத்துவமனை மற்றும் வட்டாட்சியர் அலுவலகங்களில் மாவட்ட ஆட்சியர் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.



திருப்பூர் மாவட்ட ஆட்சியராக சேலம் மாநகராட்சி ஆணையாளராக பணிபுரிந்து வந்த கிறிஸ்துராஜ் கடந்த வாரம் பதவி ஏற்றுக்கொண்டார்.



இந்நிலையில், இன்று அவிநாசி தாலுகாவிற்கு உட்பட்ட வட்டாட்சியர் அலுவலகம், அரசு மருத்துவமனையில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். 



இதேபோல், நாதம்பாளையத்தில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்தின் கீழ் செயல்படும் ரேஷன் கடை, முதலிபாளையத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி உள்ளிட்ட பகுதிகளிலும் மாவட்ட ஆட்சியர் கிறிஸ்துராஜ் ஆய்வு மேற்கொண்டார். 



அப்போது பள்ளியில் கூடுதலாக கட்டப்பட்டு வரும் வகுப்பறைகள் மற்றும் அவிநாசி ஊராட்சி ஒன்றிய பகுதிகளுக்குள் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சித் திட்ட பணிகள் குறித்து அதிகாரிகளிடம் நேரடியாக கேட்டறிந்தார். 



மேலும் பொது மக்களுக்கு எந்த வித இடையூறும் இல்லாமல் விரைந்து பணிகளை முடித்து பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...