ஊழல் அதிகாரிகளுக்கு பாராட்டு விழாவா? - திருப்பூர் ஆட்சியர் அலுவலகம் முன்பு திரண்ட விவசாயிகள் கைது!

திருப்பூர் ஆட்சியர் அலுவலகம் முன்பாக கனிம வளத்துறையில் பணியாற்றி வரும் ஊழல் குற்றச்சாட்டுக்கு உள்ளான அதிகாரிகளுக்கு பாராட்டு விழா நடத்துவதாக ஒன்று திரண்ட விவசாயிகள் மற்றும் சமூக ஆர்வலர்களை காவல்துறையினர் வலுக்கட்டாயமாக கைது செய்தனர்.



திருப்பூர்: திருப்பூர் ஆட்சியர் அலுவலகம் முன்பாக பாராட்டு விழா நடத்துவதாக ஒன்று திரண்ட விவசாயிகள் மற்றும் சமூக ஆர்வலர்களை காவல்துறையினர் வலுக்கட்டாயமாக கைது செய்தனர்.

திருப்பூர் மாவட்ட கனிம வளத்துறை இணை இயக்குனராக பணியாற்றி வருபவர் வள்ளல். இவர் திருப்பூர் மாவட்ட நிர்வாகம் சார்பில் நடத்தப்படுகின்ற ஆய்வுக் கூட்டங்கள் மற்றும் அமைச்சர் தலைமையிலான ஆய்வுக் கூட்டங்களில் கலந்து கொள்வதில்லை என கூறப்படுகிறது.

மேலும் இவர் மாவட்ட நிர்வாகத்தின் அறிவுறுத்தல்களை கேட்பதில்லை என கடந்த மாவட்ட ஆட்சியராக இருந்த வினீத் அவரை பணி நீக்கம் செய்து உத்தரவிட்டார். ஆனால் அந்த பணி நீக்கம் செல்லாது என மீண்டும் திருப்பூர் மாவட்ட கனிமவளத்துறை இணை இயக்குனராக வள்ளலை நியமித்து கனிமவளத்துறை இயக்குனர் ஜெயகாந்தன் நியமனம் செய்தார்.

இச்செயலுக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் திருப்பூர் மாவட்டத்தில் கனிம வளத்துறையில் ஊழலுக்கு வழிவகுக்கும் வகையில் செயல்படும் கனிமவளத்துறை இயக்குனர் மற்றும் கனிமவளத்துறை அமைச்சர் ஆகியோருக்கு பாராட்டு விழா நடத்துவதாக தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் அறிவித்திருந்தது.



அதன்படி இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக பாராட்டு விழா நடத்துவதற்காக ஒன்று திரண்ட விவசாயிகள் மற்றும் சமூக ஆர்வலர்கள் ஊழலுக்கு வழிவகுக்கும் அதிகாரிகளுக்கு வாழ்த்து தெரிவித்து கோஷங்களை எழுப்பினர். 



மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக போராட்டம் நடத்த அனுமதி வழங்கப்படவில்லை என அவர்களை கலைந்து போகச் சொல்லி காவல்துறையினர் வலியுறுத்திய நிலையில் தொடர்ந்து கோஷங்களை எழுப்பிய அவர்களை வலுக்கட்டாயமாக காவல்துறையினர் கைது செய்தனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...