துடியலூர் எரியூட்டு மயானத்தில் ஈஷா அறக்கட்டளை சார்பில் மரக்கன்றுகள் நடவு!

கோவை மாவட்டம் துடியலூரில் உள்ள மாநகராட்சி எரியூட்டு மயானம் துவங்கப்பட்டு 8 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. இதனை அனுசரிக்கும் விதமாக கோவை ஈஷா அறக்கட்டளை சார்பில் எரியூட்டு மயான வளாகத்தில் மரக்கன்றுகள் நடவு செய்யப்பட்டன.



கோவை: துடியலூர் எரியூட்டு மயானத்தின் 8ஆவது ஆண்டு நிறைவையொட்டி, ஈஷா அறக்கட்டளை சார்பில் மரக்கன்றுகள் நடவு செய்யப்பட்டன.



கோவை துடியலூரில் கடந்த 8 ஆண்டுகளுக்கு முன் மாநகராட்சி சார்பாக எரியூட்டு மயானம் தொடங்கப்பட்டது. இதனை ஈஷா à®¯à¯‹à®•ா மைய அறக்கட்டளை சார்பில் பராமரிக்கப்பட்டு வருகிறது.



இந்த நிலையில் எரியூட்டு மயானம் ஆரம்பிக்கப்பட்டு 8 ஆண்டுகள் நிறைவடைவதை முன்னிட்டு, ஈஷா அறக்கட்டளை சார்பாக எரியூட்டு மயான வளாகத்தில் இன்று மரக்கன்றுகள் நடும் பணியினை மேற்கொண்டனர்.



இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்களாக துடியலூர் பகுதி கழக செயலாளர் அருள்குமார், பெரியநாயக்கன் பாளையம் கிழக்கு ஒன்றிய துணைச் செயலாளர் அசோக்குமார், கலந்து கொண்டு மரக்கன்றுகளை நட்டனர். 

மேலும் இந்நிகழ்ச்சியில் நிர்மல்குமார், சீனிவாசன், மூர்த்தி, வெள்ளியங்கிரி, விஜயகுமார், கார்த்தி, சக்திவேல், ரவி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...