கோவை தெற்கு மண்டலத்தில் மாநகராட்சி ஆணையர் திடீர் ஆய்வு - திட்டங்களையும் தொடங்கி வைத்தார்!

கோவை மாநகராட்சியின் தெற்கு மண்டலத்திற்கு உட்பட்ட பல்வேறு வார்டுகளில் நடைபெற்று வரும் தார்ச்சாலை அமைக்கும் பணிகள் மற்றும் உயர்மட்ட பாலம் அமைக்கும் பணிகளை மாநகராட்சி ஆணையர் பிரதாப் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்து, பணிகளை விரைவாக முடிக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

கோவை: கோவை தெற்கு மண்டலத்தில் நடைபெற்று வரும் பல்வேறு பணிகள் குறித்து மாநகராட்சி ஆணையர் பிரதாப் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

உலக சுற்றுச்சூழல்‌ தினத்தை முன்னிட்டு கோவை‌ மாநகராட்சி பிரதான அலுவலக வளாகத்தில்‌ தமிழ்நாடு முதலமைச்சரின் பசுமை தமிழகம்‌ திட்டம்‌, பொதுமக்களின்‌ தூய்மை நகரம்‌ திட்டத்தின் கீழ்‌ கோயம்புத்தூர்‌ மாநகராட்சியின்‌ 5 மண்டலங்களுக்கும்‌ தலா 200 மரக்கன்றுகள்‌ வீதம்‌ 1000 மரக்கன்றுகளை மாநகராட்சி ஆணையாளர்‌ பிரதாப்‌ வழங்கினார்‌.



கோவை தெற்கு மண்டலம்‌ வார்டு 87க்கு உட்பட்ட புட்டுவிக்கி பிரதான சாலையில்‌ ரூ.186 லட்சம்‌ மதிப்பீட்டில் 2200 மீட்டர்‌ தொலைவிற்கு தார்சாலை அமைக்கும்‌ பணிகள் நடைபெற்று வருகிறது. இதனை மாநகராட்சி ஆணையர்‌ பிரதாப்‌ நேரில்‌ சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்‌,



இதேபோல், கோவை‌ தெற்கு மண்டலம்‌ வார்டு எண்‌.97க்கு உட்பட்ட பிள்ளையார்புரம்‌ பகுதியில்‌ ரூ.62 லட்சம்‌ மதிப்பீட்டில்‌ உயர்மட்ட பாலம்‌ கட்டுமான பணி நடைபெற்று வருவதை மாநகராட்சி ஆணையாளர்‌ பிரதாப்‌ நேரில்‌ சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்‌.



கோவை‌ தெற்கு மண்டலம்‌ வார்டு எண்‌.100க்கு உட்பட்ட மேட்டூர்‌ சாலை, நாச்சிமுத்து கவுண்டர்‌ வீதியில்‌ தமிழ்நாடு நிலையான நகா்ப்புற சாலைகள்‌ மேம்பாட்டு திட்டம்‌ |||-ன் கீழ்‌ ரூ.24 லட்சம்‌ மதிப்பீட்டில்‌ 405 மீட்டர் தொலைவிற்கு தார்சாலை அமைக்கும்‌ பணி நடைபெற்று வருகிறது. இதனை மாநகராட்சி ஆணையாளர்‌ பிரதாப்‌ நேரில்‌ சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்‌.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...