காரமடையில் அனுமதியின்றி வைக்கப்பட்ட விளம்பர பேனர் அகற்றம்!

காரமடை நகராட்சிக்குட்பட்ட பகுதிகள் மற்றும் கோவை - மேட்டுப்பாளையம் சாலையில், உரிய அனுமதியின்றி வைக்கப்பட்டிருந்த சுமார் 26க்கும் மேற்பட்ட விளம்பர பேனர்கள் நகராட்சி ஊழியர்களால் அகற்றப்பட்டுள்ளதாக காரமடை நகராட்சி ஆணையர் தெரிவித்துள்ளார்.

கோவை: கோவை மாவட்டம் காரமடை சுற்றுவட்டார பகுதிகளில் அனுமதியின்றி வைக்கப்பட்டிருந்த விளம்பர பேனர்கள் அகற்றப்பட்டதாக நகராட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேட்டுப்பாளையம் அடுத்த காரமடை நகராட்சிக்குட்பட்ட அனைத்து பகுதிகளிலும், குறிப்பாக கோவை - மேட்டுப்பாளையம் சாலையில் 26க்கும் மேற்பட்ட விளம்பரப் பலகைகள், பிளக்ஸ் பேனர்கள் அனுமதியின்றி வைக்கப்பட்டு இருந்தன. இதை நகராட்சி பணியாளர்கள் அகற்றினர்.

இதுகுறித்து காரமடை நகராட்சி ஆணையர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் சட்டம் 2023-ன்படி நகராட்சி எல்லைப் பகுதியில் விளம்பரப் பலகை, பிளக்ஸ் பேனர் வைக்க நகராட்சி ஆணையரிடம் முறையான அனுமதி பெற வேண்டும். தவறும் பட்சத்தில் அபராதம் மற்றும் சிறைதண்டனை விதிக்க சட்டம் உள்ளது.

மேலும் விளம்பர பலகைகளால் விபத்துகள் ஏற்படும் அபாயம் உள்ளது. இதற்கு சம்பந்தப்பட்ட இட உரிமையாளர் மற்றும் விளம்பர உரிமையாளரே முழு பொறுப்பு என தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே காரமடை நகராட்சி பகுதிகளில் நகராட்சி ஆணையாளர் அனுமதியின்றி விளம்பர பலகைகள், பிளக்ஸ் பேனர்கள் வைக்கக் கூடாது.

அரசு, தனியார் சுவர்களில் சுவரொட்டிகள் ஒட்டக் கூடாது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Newsletter

கோவையில் அண்ணாமலை வாக்களிப்பு: எப்போதும் இதே Dress Code தான்..! - கலகலப்பான பதில்..!

கோவை பீளமேட்டில் உள்ள பிஎஸ்ஜி கல்லூரி வளாகத்தில் வாக்களித்த பாஜக முன்னாள் மாநில தலைவர், அண்ணாமலை , தனது உடை குறித்து எழ...

கோவை மாவட்டத்தில் காலை 11 மணிக்கு 38.62 சதவீதம் வாக்குப்பதிவு; கவுண்டம்பாளையம் முதலிடம்

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் 2026 கோவை மாவட்டத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. காலை 11 மணி நிலவரப்படி 38.62 சதவீத...

கோவையில் அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் மாதிரி வாக்குப்பதிவு நடைபெற்றது

2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்குகிறது. கோவை மாவட்டத்தில் 10 தொகுதிகளில்...

கோவையில் வாக்குப்பதிவு தொடக்கம்: உற்சாகமாக வாக்களிக்கும் மக்கள்

தமிழக சட்டமன்றத் தேர்தல் 2026 வாக்குப்பதிவு இன்று காலை 7 மணி முதல் கோவை மாவட்டம் முழுவதும் அமைதியான சூழலில் தொடங்கியது....

கோவையில் 3,563 வாக்குச்சாவடிகளுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பி வைப்பு

கோவை மாவட்டத்தில் நாளைய சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக 3,563 வாக்குப்பதிவு நிலையங்களுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திர...

பொள்ளாச்சியில் 281 வாக்குச்சாவடிகளுக்கு பலத்த பாதுகாப்புடன் வாக்கு இயந்திரங்கள் அனுப்பும் பணி தீவிரம்

நாளை நடைபெறவுள்ள தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, பொள்ளாச்சி தொகுதியில் உள்ள 281 வாக்குச்சாவடி மையங்களுக்கு வாக்கு இ...