திருப்பூர் நகர்ப்புற நல வாழ்வு மையத்தில் பரிசோதனை மேற்கொண்ட அமைச்சர் சாமிநாதன்!

தமிழகம் முழுவதும் 500 நகர்ப்புற நல வாழ்வு மையத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று காணொலி காட்சி வாயிலாக திறந்து வைத்த நிலையில், திருப்பூரில் திறக்கப்பட்ட நகர்ப்புற நல வாழ்வு மையத்தில் தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தி துறை அமைச்சர் சாமிநாதன் ரத்த அழுத்த பரிசோதனை மேற்கொண்டார்.

திருப்பூர்: திருப்பூரில் உள்ள நகர்ப்புற நல வாழ்வு மையத்தில் தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தி துறை அமைச்சர் சாமிநாதன் ரத்த அழுத்த பரிசோதனை மேற்கொண்டார்.

தமிழகம் முழுவதும் 500 நகர்ப்புற நல வாழ்வு மையத் திறப்பு விழா இன்று நடைபெற்றது. தமிழகம் முழுவதும் கட்டப்பட்டு செயல்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டுள்ள நகர்ப்புற நல்வாழ்வு மையத்தை தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் காணொலி காட்சி வாயிலாக இன்று துவக்கி வைத்தார்.



திருப்பூர் மாவட்டத்தில் 27 நகர்ப்புற நல வாழ்வு மையங்கள் இன்று திறக்கப்பட்ட நிலையில் திருப்பூர் தென்னம்பாளையம் பகுதியில் நடைபெற்ற திறப்பு விழாவில் தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தி துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன், சட்டமன்ற உறுப்பினர் செல்வராஜ், மாநகராட்சி மேயர் தினேஷ்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

முதல்வரின் திறப்பு விழா நிகழ்ச்சி நிறைவடைந்த பின்பு நகர்ப்புற நல வாழ்வு மையத்தை ஆய்வு மேற்கொண்ட தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சர் சாமிநாதன் அங்குள்ள மருத்துவரிடம் ரத்த அழுத்த பரிசோதனை மேற்கொண்டார்.

இதனைத் தொடர்ந்து கர்ப்பிணி பெண்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகம் மற்றும் மக்களை தேடி மருத்துவ திட்டத்தின் கீழ் 10 பயனாளிகளுக்கு மருந்து பெட்டகத்தையும் வழங்கினார்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...